செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

வெற்றி படங்கள் இல்லாமல் சம்பளத்தை குறைத்த அருண் விஜய்.. பாலா படம் வந்தால் தான் இனிமேல் பொழப்பு ஓடும்.!

Arun Vijay – Director Bala: ஒரு ஹீரோ எத்தனை ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் அவரின் கடைசி படம் தோல்வி அடைந்தால் ரசிகர்களிலிருந்து, பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்கள் வரை அந்த ஹீரோவை கொஞ்சம் மட்டமாக தான் பார்ப்பார்கள். இதில் வளர்ந்து வரும் ஹீரோக்கள், முன்னணி ஹீரோக்கள் என்ற எந்த பாரபட்சமும் இல்லை. தோல்வி படங்கள் கொடுத்து விட்டாலே அவர்கள் வெயிட்டிங் லிஸ்டில் தான் இருக்க வேண்டும்.

சமீபத்தில் இந்த லிஸ்டில் இணைந்து விட்டார் நடிகர் அருண் விஜய். பல வருடங்களாக சினிமாவில் ஒரு வெற்றியை பார்த்து விட வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்த இவருக்கு என்னை அறிந்தால் படம் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்தது. அந்த படத்தில் இவர் நடித்த விக்டர் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இன்று வரை இந்த கேரக்டர் மட்டும்தான் பேசப்பட்டு வருகிறது. அதன் பின்னர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இவருக்கு படங்கள் அமையவில்லை.

Also Read:வெளியவே விடாமல் அட்லியை அமுக்கும் ஷாருக்கான்.. ராட்சச திமிங்கலத்துக்கு வீசும் வலை

அடுத்தடுத்து ஹீரோவாக இவர் பல படம் பண்ணினாலும், ஆவரேஜ் வெற்றியை தான் கொடுத்ததே தவிர ஆஹா ஓஹோ என்று புகழும் அளவுக்கு எதுவும் அமையவில்லை. இன்று வரை அருண் விஜய்யை காப்பாற்றி வருவது விக்டர் கேரக்டர் மட்டும்தான். இதனால் தான் புத்திசாலித்தனமாக பிளான் பண்ணி பாலா படத்திற்கு ஓகே சொன்னார் இவர். ஆனால் அதுவும் இப்போது சிக்கல் ஆகிவிட்டது.

இயக்குனர் பாலா இயக்கும் படங்கள் வணிக ரீதியாக தோல்வி அடைந்தாலும் விமர்சன ரீதியாக பாஸ் ஆகிவிடும். மேலும் இவருடைய படங்களில் நடிக்கும் கேரக்டர்கள் பல வருடம் கழித்தும் நின்னு பேசும். இதனால் தான் அருண் விஜய், சூர்யா நடித்து விலகிய வணங்கான் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டு இப்போது நடித்து வருகிறார்.

Also Read:தப்ப தெளிவா பண்ணிட்டு வாயாலேயே வடை சுடாதீங்க.! அட்லிக்கு பதிலடி கொடுத்த விடாமுயற்சி மகிழ் திருமேனி

பாலா ஒவ்வொரு காட்சியும் அவர் நினைத்தது போல் நேர்த்தியாக வரவேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருக்கக்கூடியவர். இதனாலேயே இந்த படம் எடுத்து முடிக்க லேட்டாகி வருகிறது. இந்த நேரத்தில் இதுதான் சமயம் என்று அருண் விஜய்யை அடுத்தடுத்து படங்களில் புக் செய்யும் தயாரிப்பாளர்கள் அவர் தலையில் மிளகாய் அரைத்து, ஆறு கோடியில் இருந்த அவருடைய சம்பளத்தை தற்போது ஐந்து கோடியாக குறைத்து விட்டார்கள்.

அருண் விஜய்க்கும் சமீபத்தில் ஹிட் படங்கள் எதுவும் இல்லை என்பதால் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றுவிட்டார். இருந்தாலும் பாலா இயக்கத்தில் அவர் நடிக்கும் வணங்கான் படம் ரிலீஸ் ஆன பிறகு தன்னுடைய மார்க்கெட் கண்டிப்பாக உச்சத்திற்கு சென்று விடும், மீண்டும் சம்பளத்தை உயர்த்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

Also Read:நாலா பக்கமும் வெற்றிமாறனுக்கு வரும் குடைச்சல்.. லீக்கான விடுதலை 2 கிளைமாக்ஸ் சம்பவம்

Trending News