Actor Kamal: சமீபத்தில் அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. அதிலும் குறிப்பாக விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்த விஷயம் பிரளயத்தையே ஏற்படுத்தி இருந்தது. 16 வயதே நிரம்பிய மீரா மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இப்போது பலர் தற்கொலை முயற்சியில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என பல அறிவுரைகள் கூறி வருகிறார்கள். இதுபற்றி கமலும் சமீபத்தில் பேசியிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாகத்தான் இருக்கிறது. அதாவது ரசிகர்களால் ஆண்டவராக பார்க்கப்படும் கமலே இந்த நிலையை கடந்து தான் வந்திருக்கிறார்.
அந்த அளவுக்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை கண்டிப்பாக ஏற்படும். இந்நிலையில் கமல் தனது 20, 21 வயதில் தற்கொலை குறித்து யோசித்துள்ளாராம். இதற்கு காரணம் கலை உலகம் அவரை கண்டு கொள்ளவில்லை என்ற விரக்தி தானம். என்னதான் முட்டி மோதி சினிமாவில் ஜெயித்து விட வேண்டும் என்று நினைத்தாலும் அப்போது அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அந்த நிலையில் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு அதன் பிறகு தான் வெற்றி கனியை கமல் ருசித்து இருக்கிறார். ஆகையால் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் அவசரப்படக்கூடாது, காத்திருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் மரணம்.
அது எப்போது வருமோ அப்போது வரட்டும், அதை நீங்கள் தேடாதீர்கள் என்று கமல் அறிவுரை கூறியிருக்கிறார். இப்போது சாதித்த பல பிரபலங்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அவர்கள் பார்க்காத தோல்விகளே கிடையாது தான். அவ்வாறு தோல்விகளை பாடமாக எடுத்ததுதான் சாதித்து காட்டி இருக்கிறார்கள்.
அந்த வகையில் கமலும் தனக்கு தற்கொலை எண்ணம் வந்துள்ளது என்பதை வெளிப்படையாக சொல்லி மற்றவர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலை வரும்போது அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை கூறியிருக்கிறார். அதுவும் இப்போது உள்ள இளைய தலைமுறையினர் அதிகம் தற்கொலை செயல்களில் ஈடுபடுகிறார்கள்.