அவர மாதிரி ஒரு ஜென்டில்மேன காமிங்க இப்பவே தாலி கட்டிக்கிறேன்.. திரிஷாவுக்கு இருக்கும் பேராசை!

Actress Trisha: 40 வயதிலும் இம்புட்டு அழகா! என இளசுகளை திணறடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக தோன்றி பேரழகியாக தெரிந்தார். எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என போகிற இடத்தில் எல்லாம் ஒரே கேள்வியை திரிஷாவிடம் தொடர்ந்து கேட்கின்றனர்.

தற்போது திரிஷா நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் உடன் லியோ படத்தில் ஜோடி போட்டு இருக்கிறார். இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் திரிஷா, ‘திருமணத்திற்கு நான் தயார் ஆனால் அவர மாதிரி ஒரு ஜென்டில்மேன் காமிச்சா இப்பவே தாலி கட்டுகிறேன் என்று தன்னுடைய பேராசையை போட்டுடைத்துள்ளார்.

Also read: மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் 5 டாப் ஹீரோயின்கள்.. 200 கோடியை தூக்கி எறிந்த சமந்தாவின் சொத்து மதிப்பு

ஏற்கனவே பல காதல் தோல்விகளை சந்தித்த திரிஷா இனிமேல் எந்த ஒரு நடிகரின் மீதும் காதலில் விழமாட்டேன் என தன்னுடைய தாயிடம் சத்தியம் செய்து இருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சினிமாவில் இப்போது ஒரு ரவுண்டு கட்டுகிறார்.

இவர் ஏற்கனவே தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை திருமணம் செய்ய இருந்த நிலையில் திடீரென்று அந்த கல்யாணம் நின்று போனது. இதற்கு காரணம் தனுஷ் உடன் அவர் இருந்த நெருக்கம் தான். இதை திரிஷா மறுத்தாலும் வருண் அதை நம்பாமல் கல்யாணத்தை நிறுத்திவிட்டார். அதன் பின்பு திரிஷா மலையாள தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருந்தார்.

Also read: ஏ கிரேட் நடிகைகள் என பிரிக்கப்பட்ட 6 ஹீரோயின்.. நம்பர் ஒன் நடிகையை தூக்கி கடாசிய த்ரிஷா

அந்த திருமணமும் நின்று விட்டது. அதன் பின்பு திருமணக் குறித்து கொஞ்சம் கூட யோசிக்காமல் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்திய திரிஷா, இப்போது அவருடைய கல்யாண ஆசையை பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். எனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும். அவர் ஒரு ஜென்டில்மேன், நானும் அவரும் நிறைய பேசியிருக்கிறோம். அவர் செய்யும் பல விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.

நடிகராக மட்டுமல்லாமல் ஒரு கணவராகவும் அப்பாவாகவும் மிகச் சிறந்த முறையில் தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுகிறார். அதுபோல ஒருவரை தான் எந்த ஒரு பெண்ணும் கணவராக பெற விரும்புவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஜென்டில்மேனை கை காட்டுங்கள், இப்பவே கழுத்தை நீட்ட ரெடி என்று திரிஷா வெளிப்படையாக சொன்னார். அஜித்- திரிஷா ஜோடி இதுவரை கிரீடம், ஜி, என்னை அறிந்தால், மங்காத்தா அதன்பிறகு இப்போது விடாமுயற்சி போன்ற படங்களில் இணைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also read: இந்த வாரம் ரிலீசாக போகும் 6 படங்கள்.. விஜய் ஆண்டனி உடன் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் திரிஷா