கமல், சூர்யா மட்டும் என்ன கொசுருக்கு வந்த கருவேப்பில்லையா.. பாராபட்சம் பார்க்கும் தியேட்டர் முதலாளிகள்

Kamal-Suriya: சினிமா துறையும் தியேட்டர்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இப்போது சோசியல் மீடியா, டிஜிட்டல் தளம் என டெக்னாலஜி வளர்ந்து விட்டாலும் ஒரு ஹீரோ வெற்றி நாயகனாக மாறுவதற்கு திரையரங்குகள் தான் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் தற்போது நடந்திருக்கும் ஒரு விஷயத்தில் தியேட்டர் முதலாளிகள் பாராபட்சம் காட்டி இருப்பது கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு கமல் டிடிஹெச் முறையை பற்றி பேசியபோது ஒட்டுமொத்த திரையரங்கு உரிமையாளர்களும் அவருக்கு எதிராக கொந்தளித்தனர்.

Also read: கமல் சொல்வதை கொஞ்சம் கூட மதிக்காத ஷங்கர்.. இந்தியன் 2 மீண்டும் துளிர் விட்ட சண்டை

அது மட்டுமல்லாமல் அவருடைய படத்தை இனிமேல் திரையிட மாட்டோம் என்று கூட போர்க்கொடி தூக்கினார்கள். அதையெல்லாம் தன்னுடைய சமயோகித புத்தியால் கமல் சமாளித்தார். ஆனால் அவரே கூட நாட்டை விட்டு செல்ல போகிறேன் என்று கலங்கிப்போன சம்பவமும் நடந்தது.

அதேபோன்றுதான் சூர்யாவின் நடிப்பில் உருவான ஜெய் பீம் ஓடிடி தளத்தில் வெளியானபோது திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் பிரச்சனை செய்தனர். அதையெல்லாம் சூர்யா திறமையாக சமாளித்தார். இருந்தாலும் இதன் மூலம் இவர்கள் இருவரையும் தியேட்டர் முதலாளிகள் ஒரு வழி செய்து விட்டனர்.

Also read: லோகேஷிடம் பலிகாடாக மாட்டிய விஜய்.. லியோ படத்தில் ஏமாறப்போகும் 3 விஷயங்கள்

ஆனால் இப்போது லியோ ட்ரெய்லர் சமயத்தில் விஜய் ரசிகர்கள் ரோகினி தியேட்டரை சல்லி சல்லியாக நொறுக்கிய விவகாரம் எரிகிற நெருப்பில் தண்ணீர் ஊற்றிய கதையாக மாறி இருக்கிறது. தொட்டதற்கெல்லாம் போர் கொடி தூக்கும் சங்கம் இந்த விஷயத்தில் வாய் மூடி மௌனமாக இருப்பது ஏனோ தெரியவில்லை.

இதைத்தான் தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். ரோகினி தியேட்டர் ஓனர், சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தும் கூட அவர் அமைதி காத்து வருகிறார். அதிலும் விஜய்க்கு எதிராக எந்த குரலும் கொடுக்காதது விமர்சிக்கப்பட்டு வருகிறது. அப்படி என்றால் கமல், சூர்யா மட்டும் கொசுருக்கு வந்த கருவேப்பிலையா என அவர்களுடைய ரசிகர்கள் இப்போது கொந்தளித்து வருகின்றனர்.

Also read: லியோவால் பல லட்சம் நஷ்டம்.. வாயை திறக்காமல் கம்முனு உம்முனு இருக்கும் தளபதி

Next Story

- Advertisement -