சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விடாது கருப்பு போல் ஆண்டவரை பிடித்த இந்தியன் 2.. சொல்ல முடியாமல் தவிக்கும் இயக்குனர்

Indian 2-Kamal: கன்னித்தீவு போல வருட கணக்கில் இழுத்தடித்து வரும் இந்தியன் 2 எப்ப தான் பா ரிலீஸ் பண்ணுவீங்க என ரசிகர்கள் நொந்து போகும் அளவுக்கு இருக்கிறது. சங்கர், கமல் கூட்டணியில் 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தால் இயக்குனர் ஒருவர் சொல்ல முடியாமல் தவித்து வருகிறாராம்.

அதாவது கமலை வைத்து எச் வினோத் இயக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் அது எப்போது தொடங்கும் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் நவம்பர் 7 கமல் பிறந்த நாளன்று இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கலாம் என்று வினோத் ஒரு பிளான் போட்டு வைத்திருந்தாராம்.

Also read: 1000 கோடி பட்ஜெட்டில் கமல் கைவசம் இருக்கும் 4 படங்கள்.. உலகநாயகனுக்கே ட்ரெய்னிங் கொடுக்கும் ஹெச்.வினோத்

ஆனால் ஆண்டவரோ மீண்டும் இந்தியன் 2 படத்தில் நடிக்கப் போகிறேன் என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். நேற்று தான் லைக்கா நிறுவனம் கமல் டப்பிங் பேச வந்த வீடியோவை வெளியிட்டு இருந்தது. ஆனால் இன்னும் ஷூட்டிங் முடியவில்லை என்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

இதனால் வினோத் தன்னுடைய படம் எப்போது ஆரம்பிக்கும் என்ற கவலையில் இருக்கிறாராம். இந்த வருட தொடக்கத்தில் அவருடைய துணிவு படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதே சூட்டோடு அடுத்த படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று இருந்தவருக்கு இப்படி ஒரு சோதனை வந்திருக்கிறது.

Also read: இந்த ஸ்டைலில் படம் பண்ணுங்க.. கமல் வார்த்தையால் எரிச்சலான ஹெச்.வினோத்

இதே போல் தான் அஜித்தின் விடாமுயற்சியும் இழுத்தடித்து இப்போது தான் ஷூட்டிங் ஆரம்பித்திருக்கிறது. ஆனால் வினோத் இன்னும் அதற்கான முதல் படியை எடுத்து வைக்க முடியாமல் தவித்து வருகிறார். ஏற்கனவே ஆண்டவருக்காக அவர் மாதக்கணக்கில் காத்திருந்தார்.

இதில் இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அந்த வகையில் இந்தியன் 2 ஆண்டவரை விடாது கருப்பு போல் இன்னும் இறுக்கி பிடித்து இருக்கிறது. அதிலிருந்து அவர் வெளியில் வந்தால் தான் அடுத்தடுத்த படங்கள் டேக் ஆஃப் ஆகும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

Also read: 68 வயதிலும் கமலை புரட்டி எடுக்கும் எச் வினோத்.. ஹாலிவுட்டை அடித்து நொறுக்க போகும் கூட்டணி

- Advertisement -

Trending News