Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இருந்த மொத்த மதிப்பும் தற்போது தரைமட்டமாகிவிட்டது. அதாவது இந்த நாடகம் வந்து இரண்டு வருஷம் ஆன நிலையில் கடந்த மாதம் வரை மக்கள் மனதில் சிம்ம சொப்பனமாக இருந்தது. ஆனால் எப்பொழுது குணசேகரன் கேரக்டர் இல்லையோ அப்போதே தட்டு தடுமாறி விட்டது. ஆனாலும் எப்படியாவது கரையேற்ற வேண்டும் என்று அந்த கேரக்டருக்கு ஏற்ற மாதிரி வேல ராமமூர்த்தியை நடிக்க வைத்தார்.
ஆரம்பத்தில் வந்த பொழுது என்னமோ இவர்தான் அந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமான ஆளு என்பது போல் தெரிந்தது. ஆனால் வந்து கொஞ்ச நாளிலேயே இதுவரை குணசேகரன் சேர்த்து வைத்த மொத்த பெயரையும் டேமேஜ் செய்து எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டார். அதற்கு காரணம் இவருடைய அடாவடித்தனமான நடிப்பும், வில்லங்க தனமான பேச்சும் தான்.
என்னதான் குணசேகரன் கேரக்டர் வில்லத்தனமாக இருந்தாலும், அவரைப் பார்த்து நாங்கள் ரசித்து வந்தோம். இன்னும் சொல்லப்போனால் அவருடைய நடிப்புக்காக தான் நாடகத்தையே பார்த்தோம் என்று மக்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் இவரால் அவரே மாதிரி நடிக்க முடியல என்றாலும் பரவால்ல அவர் பெயரை கெடுத்து விட வேண்டாம் என்று ஆதங்கத்துடன் புலம்புகிறார்கள்.
அத்துடன் இவர் வந்தாலே எங்களுக்கு நாடகம் பார்க்க தோன மாட்டேங்குது. தயவு செய்து இவர் வேண்டாம் குணசேகரன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள். அதனாலயே கடந்த இரண்டு வாரமாக இந்த நாடகம் டிஆர்பி யில் இரண்டாம் இடத்துக்கு போய்விட்டது. இதனால் இவரை தொடர்ந்து நடிக்க வைத்தால் கொஞ்சநஞ்சம் இருக்கிற மக்களும் பார்க்காமல் போய்விடுவார்கள்.
அதனால் தான் இவரை போலீஸ் வைத்து இப்போதைக்கு இவருடைய கேரக்டரை முடித்து வைத்திருக்கிறார்கள். இதுல வேற குணசேகரன் கேரக்டருக்கு இவரை நடிக்க வைப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்து கெஞ்சி கூத்தாடி அழைத்தார்கள். அதிலும் மாரிமுத்து வாங்கின சம்பளத்தை விட டபுள் மடங்கு சம்பளம் அதிகமாக தருகிறோம் என்று இவரை கூப்பிட்டு நடிக்க வைத்தார்கள்.
ஆனால் தற்போது இவர் தேவை இல்லை என்று முடிவு பண்ணி விட்டது சன் டிவி நிறுவனம். அந்த வகையில் இப்போதைக்கு குணசேகரன் கேரக்டர் இல்லாமலேயே நாடகத்தை கொண்டு வரப் போகிறார்கள். அதற்காக கதிர் மற்றும் ஞானத்தை வைத்து வில்லத்தனத்தை காட்டப் போகிறார்கள். மேலும் இவர்களுடன் சேர்ந்து குணசேகரின் அம்மா மற்றும் கரிகாலனும் அங்கே வீட்டில் இருக்கும் பெண்களை அடிமைப்படுத்த போகிறார்கள்.