டீசரில் உள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ்.. திருப்பதி மலை ஏறினது வீணா போகல

Leo Movie – Thalapathy Vijay: விஜய் நடித்த லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஆரம்பித்ததில் இருந்தே சிக்கலுக்கு மேல் சிக்கலாக தான் இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான போது விஜய் போன்று உச்ச நடிகர் இது மாதிரி புகை பிடிக்கும் பழக்கத்தை ஆதரிப்பது போல் இந்த பாட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ரொம்பவே தவறு என சர்ச்சை கிளம்பியது.

பின்னர் படத்தின் முக்கிய வில்லன்கள் ஆன சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் சர்ஜா கேரக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அவர்கள் கையில் சிகரெட் இருப்பது போல் காட்சிகள் இருந்ததால் மீண்டும் மீண்டும் இந்த படத்திற்கான எதிர்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. எல்லாத்திற்கும் வைத்த பெரிய ஆப்பாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது.

விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறேன் என்ற பெயரில் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டவுடன் அதிரடியாக படத்தின் ட்ரெய்லரை பட குழு வெளியிட்டது. இங்குதான் படத்தின் ஒட்டுமொத்த பிரச்சனையும் ஆரம்பித்தது. இந்த ட்ரெய்லரில் ஒரு காட்சியில் விஜய் கெட்ட வார்த்தை பேசி இருப்பார். மக்களின் அதிக கவனத்தைப் பெற்று இருக்கும் இவர் இது போன்ற வார்த்தைகளை பேசி இருக்கக் கூடாது என ஒரு பக்கம் எதிர்ப்பும், அவர் தன் வேலையை தான் செய்கிறார் என ஆதரவும் இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில் விஜய்யின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தாமாக முன்வந்து, இந்த வார்த்தையை விஜய் பேசவே மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். இருந்தாலும் நான் தான் அவரை வற்புறுத்தி அந்த வார்த்தையை பேச வைத்தேன். எந்த எதிர்ப்பு வந்தாலும் அதற்கு முழு காரணமும் நான் மட்டும்தான் என்று சொல்லி இருந்தார்.

இப்படி சர்ச்சைகள் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் தான் படத்தின் எந்தெந்த காட்சிகள் மியூட் செய்யப்பட்டது, கட் செய்யப்பட்டது, பிளர் செய்யப்பட்டது என மத்திய சென்சார் போர்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அப்போதுதான் தெரிந்தது இந்த வார்த்தை வெறும்ட்ரெய்லர் தான், படத்தில் இதைவிட நிறைய தகாத வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பது. விஜய்யின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதால் யூடியூபிலும் அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

ரசிகர்கள் மற்றும் விஜய்யின் நலம் விரும்பிகள் பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது யூடியூப் வீடியோவிலும் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு லியோ பட குழுவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றன. ஒரு பக்கம் ட்ரெய்லர், மறுபக்கம் தமிழக அரசு அதிகாலை காட்சிக்கு கிரீன் சிக்னல் கொடுத்தது என இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் லியோ படம் தான் திருவிழா போல் கொண்டாடப்பட இருக்கிறது.

Next Story

- Advertisement -