Leo Movie: கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் ஒரு படத்தை நடித்து முடித்து ரிலீஸ் செய்வது என்பது பெரிய விஷயமாக ஆகிவிட்டது. எந்த இடத்தில் இருந்து எப்படி பிரச்சினை வரும் என்று யாராலயுமே யோசிக்க முடியாத அளவுக்கு அவருக்கு பிரச்சனைகள் வருகிறது. அதிலும் லியோ படத்திற்கு நடக்கும் போராட்டம் இதுவரை எந்த நடிகர்களுமே சந்தித்திராத அளவுக்கு இருக்கிறது.
ஒரு நடிகர் என்பதை தாண்டி அவர் மீது எல்லோரது கவனமும் இருக்கும் அளவிற்கு அவர் பேசும் சில வசனங்கள் மற்றும் அவருடைய நடவடிக்கைகளும் தான் இது போன்ற சிக்கலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதுவரை எல்லா படத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்ட நிலையில் லியோ படத்திற்கு அதுவும் இல்லை என்று ஆகிவிட்டது.
படத்தின் பாடல்கள், கேரக்டர் அறிமுகம், ட்ரெய்லர் என லியோவுக்கு எல்லாமே பிரச்சனை தான். சில தினங்களுக்கு முன் நான் ரெடி தான் வரவா பாடலுக்கு ஆடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை இதனால் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம், அப்படி ரிலீஸ் செய்தால் போராட்டம் செய்வோம் என ஒரு கூட்டம் கிளம்பியது. அந்த பிரச்சனையே இப்போதுதான் முடிவுக்கு வந்தது அதற்குள் ரிலீசுக்கு வேறொரு பிரச்சனை ரெடியாகி இருக்கிறது.
லியோ படம் ஏற்கனவே மும்பை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாது என அந்த மாநிலத்தை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதேபோன்று காவிரி பிரச்சனை நிலவி வருவதால் கர்நாடகாவில் தமிழ் படம் ரிலீஸ் ஆவது என்பது நடக்கவே நடக்காது என்பதும் உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆந்திராவிலும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் லியோ படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் ஏற்படுத்தியது வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுதான் என்பது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. வாரிசு படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை லலித் தான் வாங்கி இருந்தார். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் லியோ படத்தை ஆந்திராவில் ரிலீஸ் செய்யக்கூடாது என ரெட் கார்டு வாங்கி இருக்கிறார் தில் ராஜு. இதன் மூலம் கண்டிப்பாக லியோ படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படக்கூடும். வாரிசு படத்தின் மூலம் தில் ராஜுவுக்கு விஜய் உடன் நல்ல நட்பு ஏற்பட்டு இருப்பதால் கண்டிப்பாக இந்த பிரச்சனை பேச்சு வார்த்தையுடன் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.