வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

80, 90களில் கமலுக்கு டஃப் கொடுத்த விஜயகாந்த்.. ஒரே நாளில் விடாமல் 22 தடவை மோதிய கேப்டன்

Kamalhassan and Vijayakanth: சினிமாவை பொருத்தவரை காலங்காலமாக ரெண்டு நடிகர்களுக்கிடையே போட்டி போட்டு வருவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி 80, 90களில் ரஜினி மற்றும் கமல் ரொம்பவே பீக்கில் இருந்தார்கள். அந்த நேரத்தில் இவர்களுக்கு இடையே ஒரு போட்டி நாயகனாக சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் விஜயகாந்த். ஆரம்பத்தில் பல தடங்கல்களை சந்தித்த இவர், போகப் போக வெற்றியை கொடுத்து அசுர வளர்ச்சியை அடைந்து விட்டார்.

இந்நிலையில் ஒரே நாளில் கமலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விடாமல் 22 தடவை மோதி பார்த்து இருக்கிறார். அதில் யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்ப்போம். அந்த வகையில் கமல் மற்றும் விஜயகாந்த் போட்டி 1981 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. அதில் கமல் நடித்த சங்கர் லால் படத்துக்கு போட்டியாக சிவப்பு மல்லி படம் வெளியானது. இதில் கமல் நடித்த படம் மட்டுமே அதிக வசூலை பெற்றது.

அடுத்ததாக மூன்றாம் பிறை படத்துடன் பார்வையின் மறுபக்கம் திரைப்படம் வெளிவந்தது. ஆனால் அதிக வசூலை பெற்றது கமல் படம் தான். அடுத்து கமல் நடிப்பில் எனக்குள் ஒருவன் படம் வெளிவந்தது. அதற்கு போட்டியாக விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வைதேகி காத்திருந்தாள் அதிக வசூலை பெற்று விஜயகாந்தை வெற்றி நாயகனாக ஜொலிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து ஒரு கைதியின் டைரி என்ற படத்துடன் அலையின் ஓசை வெளிவந்தது. ஆனால் கமல் படம் மட்டுமே ஜெயித்து விஜயகாந்தை தோற்கடித்தது.

அடுத்து கமல் நடிப்பில் வந்த காக்கிச்சட்டை படத்துடன் ராம் ஸ்ரீ ராமன் வந்த படம் தோல்வியை தழுவியது. அடுத்து ஜப்பானில் கல்யாணராமன் படத்தோட ஏமாறாதே ஏமாறாதே படம் வெளிவந்தது. அப்படி வந்த படத்தில் விஜயகாந்த் படம் தான் வெற்றி பெற்றது. அடுத்து புன்னகை மன்னனுடன் மோதிய விஜய்காந்தின் தர்ம தேவதை மற்றும் தழுவாத கைகள் சராசரியான வெற்றியை பெற்றது. அடுத்து காதல் பரிசு படத்துக்கு போட்டியாக சிறைப்பறவை வெளிவந்து அதிக லாபத்தை பார்த்தது.

இதனை தொடர்ந்து நாயகன், உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு படங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து அனைத்து படங்களுமே வெற்றி பெற்றது. அதேபோல் உன்னால் முடியும் தம்பி படத்தோட விஜயகாந்தின் தம்பி தங்க கம்பி வெளியாகி அதில் விஜயகாந்த் படம் லாபத்தை பார்த்தது. மேலும் கமல் நடிப்பில் வெளிவந்த வெற்றி விழா படத்துடன் தர்மம் வெல்லும் மற்றும் ராஜநடை படங்கள் வெளியாகி குறைவான வசூலை பெற்றது.

இப்படி தொடர்ந்து 22 படங்கள் வெளியாகி இருக்கிறது. கடைசியாக இருவரும் மோதிக்கொண்ட படம் 2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி மற்றும் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா. ஆனால் இதில் விருமாண்டி படம் மட்டும் அதிக வசூலை பெற்றது. மொத்தத்தில் கமல் 9 தடவை வெற்றி பெற்றிருக்கிறார். விஜயகாந்த் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 6 தடவை இரண்டு படங்களுமே சுமாரான வெற்றியை தழுவி இருக்கிறது.

- Advertisement -

Trending News