ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் நடந்த கலவரம், பஞ்சாயத்தை கூட்டிய சகுனிகள்.. வெளுத்து வாங்கிய அமுல் பேபி

BB 7- Vishnu Fight With Poornima: பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய மூன்றாவது வாரத்திலேயே சண்டைக்கு மேல் சண்டை என கோலாகலமாக போய்க்கொண்டிருக்கிறது. காரணம் கிடைத்தால் தான் சண்டை என இந்த சீசனில் கிடையாது. கண்டன்ட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலே ஏழரை கூட்டி விடுகிறார்கள் ஹவுஸ் மேட்ஸ். இதற்கு முந்தைய சீசன்கள் மொத்தத்தையும் கரைத்து குடித்து வந்த இவர்கள் கண்டன்ட் கொடுத்தால் தான் உள்ளே இருக்க முடியும் என்பதை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து இரண்டு வாரங்களாக நாமினேஷன் ஆகி கொண்டிருந்த விஷ்ணு இந்த வாரம் நாமினேட் ஆகவில்லை. இது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததோ இல்லையோ, விஷ்ணுவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் இந்த நல்ல பெயரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நேற்றிலிருந்து முயற்சி செய்த விஷ்ணு, இன்று பொறுமையை இழந்துவிட்டார்.

மணி மற்றும் ரவீனா போன்று காதல் கன்டென்ட் கொடுக்க விஷ்ணு முயற்சி செய்து பூர்ணிமாவிடம் கொஞ்சம் வழிந்து பேசியது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் பூர்ணிமா அவரை சுத்தமாக மதிக்காமல், கிடைத்த இடத்தில் எல்லாம் பல்பு கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இன்று விஷ்ணுவிடம் வசமாக சிக்கிய பூர்ணிமாவை வெளுத்து வாங்கி இருக்கிறார் அமுல் பேபி.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு, ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது விதி. இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஐஷூ மற்றும் ரவீனா கிச்சனில் நின்று கொண்டிருக்கும் பூர்ணிமாவிடம் காப்பி போட்டு கேட்டிருக்கிறார்கள். ஆனால் பூர்ணிமா அதை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

இதனால் டென்ஷனான விஷ்ணு, பூர்ணிமாவிடம் அவர்கள் காபி போட்டு கேட்டதற்கு நீ ஏன் கொடுக்கவில்லை, நீ பர்சனலாக டார்கெட் செய்கிறாய் என்று சொல்ல, பூர்ணிமா அவருடைய தோழி மாயாவிடம் இதைப் பற்றி சொல்கிறார். அதற்கு விஷ்ணு நீ கிச்சனில் இருந்தால் உன்னை தான் கேட்பார்கள், செய்ய முடியாத நீ கிச்சனில் ஏன் இருக்கிறாய் என கேட்கிறார். அதற்கு பூர்ணிமா உன்னை கேட்டால் நீ செய்து கொடு என்று பதிலளிக்கிறார்.

இதனால் செம காண்டான விஷ்ணு, இந்த வீட்டில் நீதான் பெர்பெக்ட் என நினைக்கிறாய், ஆனால் உண்மையில் நீ தான் இந்த வீட்டில் ரொம்பவும் வர்ஸ்ட் என சொல்கிறார். பூர்ணிமா பதில் ஏதும் சொல்லாமல் முகம் வாடி நிற்பது போல் அந்த வீடியோ காட்டப்பட்டு இருக்கிறது. விஷ்ணு இந்த வாரம் சேவ் ஆனதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் பூர்ணிமா மற்றும் மாயா இணைந்து பிரச்சனை செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News