புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எடுபடாமல் போன புது குணசேகரன் கதாபாத்திரம்.. புதுசாக வில்லனை இறக்கி டெஸ்ட் பண்ணும் எதிர்நீச்சல் சீரியல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது பார்ப்பதற்கு சுவாரசியமாக இல்லை. சம்பந்தமே இல்லாமல் கதையை இழுத்தடிக்கிறார்கள். அதுவும் குணசேகரன் கதாபாத்திரம் இல்லாததால் எங்களுக்கு நாடகத்தைப் பார்க்க தோண மாட்டேங்குது என்று பலரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் எப்படியாவது இந்த நாடகத்தை பழையபடி கொண்டு வந்து விட வேண்டும் என்று இயக்குனர் போராடி வருகிறார்.

அதனால் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக வேல ராமமூர்த்தி இருப்பார் என்று அவரை இந்த நாடகத்திற்கு கூட்டிட்டு வந்தார்கள். ஆனால் அவருடைய நடிப்பு குணசேகரன் கதாபாத்திரத்திற்கு எடுபடாமல் போய்விட்டது. அதனால் வந்த சுவடு தெரியாமல் துண்ட காணும் துணிய காணும் என்று தல தெறித்து ஓடிப் போய்விட்டார்.

அடுத்தபடியாக குணசேகரன் போல் நக்கல் நையாண்டி பேச்சுடன் ஒரு வில்லன் கதாபாத்திரத்தை கொண்டு வந்து இறக்கிறார்கள். இவருடைய நடிப்பை எந்த அளவிற்கு மக்கள் வரவேற்கிறார்கள் என்பதை டெஸ்ட் பண்ணிய பிறகு கதையை அதற்கேற்ற மாதிரி மாற்றலாம் என்று புது அஸ்திவாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

அதுவும் இவர் யார் என்றால் ஜனனியின் தம்பியாக வருகிறார். அதாவது ஜனனியின் அப்பா நாச்சியப்பன் குடும்பத்தை புதுசாக கொண்டு வந்திருக்கிறார்கள். இனி இவர் தான் ஜனனிக்கு வில்லனாகவும், சுவாரஸ்யமான கேரக்டராகவும் இருக்கப் போகிறார். ஆக மொத்தத்தில் எப்படியாவது பழையபடி இந்த நாடகத்தை மக்களுக்கு பிடித்த மாதிரி கொண்டு வந்து விட வேண்டும் என்று புதுப்புது யுத்தியை பாலோ பண்ணி வருகிறார்கள்.

ஆனாலும் இந்த நாடகம் பார்ப்பதற்கு எங்களுக்கு விருப்பமே வர மாட்டேங்குது. அப்படியே பார்த்தாலும் ரொம்பவே எரிச்சலாக தான் இருக்கிறது. கதையும் பழைய மாதிரி விறுவிறுப்பாக இல்லை. எப்ப பாத்தாலும் சண்டையும் சச்சரவுமாகத்தான் கொண்டு போகிறார்கள் என்று தொடர்ந்து இந்த நாடகத்திற்கு வெறுப்பை கொட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் அரை மணி நேரமே பார்க்க விருப்பம் இல்லாமல் இருக்கிறது. இதுல வேற ஒரு மணி நேர ஸ்பெசல் தேவையில்லாதது. அதுவும் அன்னைக்கும் பிரச்சனை சண்டை என்றுதான் கொண்டு போகிறீர்கள். எப்படி இருந்த நாடகம் குணசேகரன் கதாபாத்திரம் இல்லாததால் தடுமாறிப் போய்விட்டது. இதுல புது வில்லன் கேரக்டர் ஆவது மக்களுக்கு பிடித்த மாதிரி அமைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News