லியோ ரிலீஸ் ஆகாத முக்கிய தியேட்டர்களின் லிஸ்ட்.. தனக்குத்தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட விஜய்

Leo Movie: நடிகர் விஜய் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு பிரச்சனை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. நாளை ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இன்னும் படத்திற்கான பஞ்சாயத்து முடிக்கப்படாமல் இருப்பது தான் இப்படி ஒரு பெரிய பிரச்சனைக்கு காரணமாக அமைந்துவிட்டது. லியோ படத்தை கோலாகலமாக கொண்டாட காத்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு இன்று வெளியாகி இருக்கும் செய்தி தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது.

விஜய் படம் ரிலீஸ் என்றாலே அந்தத் தியேட்டர்கள் திருவிழா போல் காட்சி அளிக்கும். இதுவரை விஜய் படத்தை வெளியிடக்கூடாது என வெளியில் இருந்து அழுத்தம் வந்திருக்கிறது தவிர திரையரங்குகள் எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவித்தது கிடையாது. ஆனால் முதல்முறையாக திரையரங்குகள் முன் வந்து லியோ படத்தை நாங்கள் ரிலீஸ் செய்ய மாட்டோம் என அறிவிப்பு வைக்கும் அளவிற்கு பிரச்சனை முத்தி விட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை 70 சதவீதம் தியேட்டர்களில் லியோ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஓபன் ஆகவில்லை. காரணம் படத்தின் தயாரிப்பாளர் லலித் என சொல்லப்பட்டது. அதாவது லியோ படத்தின் ஒரு வார வசூலில் 80 சதவீதம் தயாரிப்பு தரப்பிற்கு கொடுக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இதில் பல திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒப்புதல் கிடையாது.

பல தியேட்டர்களில் இதனால் தான் அட்வான்ஸ் புக்கிங் நடத்தப்படவில்லை. இதற்கு இடையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி, லலித் கேட்ட 80 சதவீதம் ஷேரில் 90% விஜய்க்கு தான் போக இருக்கிறதாம். எனவே இப்படி ஒரு ஒப்பந்தத்தை சொன்னதே விஜய் தான் என தெரிகிறது. சம்பளம் ஒரு பக்கம் இருக்க இப்படி லாபத்தில் ஷேர் என அவர் இறங்கி இருப்பது எல்லோருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வசூல் அதிகமாக வரும் பணத்தை அள்ளிவிடலாம் என நினைத்த விஜய் இப்போது தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த ஒப்பந்தத்திற்கு அடிப்படியாத திரையரங்குகள் நாங்கள் லியோ படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என முடிவெடுத்து விட்டார்கள். இதனால் லியோ படத்தின் வசூல் கோடி கணக்கில் பாதிக்கப்பட இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக லாபத்தில் அடி வாங்கும்.

முன்னணி ஹீரோக்களின் படங்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் இங்கு லியோ திரையிடப்படாது என போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று வெற்றி திரையரங்கில் லியோ படத்திருக்கான புக்கிங் இல்லை என போர்டு வைத்திருக்கிறார்கள். இன்று மாலைக்குள் இந்த பிரச்சனை பேசி தீர்க்கப்படவில்லை என்றால் லியோ படத்தின் வசூல் கேள்விக்குறி ஆகிவிடும்.