திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

லியோவுக்காக தயாரிப்பாளர் செய்த 6 விஷயங்கள்.. தனித்தன்மையுடன் இருக்கும் சன் பிக்சர்ஸ் மாறன்

Leo- kalanithi maran: நாளை லியோ படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் இப்போது ஆரவாரத்துடன் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் லியோ படத்திற்காக தயாரிப்பாளர் லலித் ஆறு விஷயங்கள் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் ஜெயிலர் படத்திற்காக கலாநிதி மாறன் இது போன்று எதுவுமே செய்யவில்லை.

பெரிய மனுஷனாக அவர் நடந்து கொண்டதால் தான் இப்போது வரை சன் பிக்சர்ஸ் என்ற ஒரு தனி அடையாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் லலித் செய்வதாக சொல்லப்படும் ஆறு விஷயங்கள் என்ன என்பதை இப்போது வரிசையாக பார்க்கலாம். முதலாவதாக நாலு மணி ஷோ தனது படத்திற்கு வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார்.

ஆனால் ஜெயிலர் படத்திற்கு அப்படி ஒரு பேச்சே யாரும் எடுக்கவில்லை. அடுத்தபடியாக நான்கு வாரத்திற்கு முன்பே ரிசர்வேஷனை ஓப்பன் செய்து விட்டனர். மேலும் ட்ரெய்லரையே தியேட்டரில் வெளியிட்டனர். இதனால் அங்கு தியேட்டரையே அடித்து நொறுக்கியபடி பல அசம்பாவிதங்கள் நடந்தேறியது.

மேலும் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக பேக்கில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு தியேட்டர் ஓனர்கள் இடம் வரும் இலாபத்தில் 75% ஷேர் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு லியோ படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு பல ஆர்ப்பாட்டமான விஷயங்கள் அரங்கேறி இருக்கிறது.

கடைசியாக ஜெயிலர் படத்தை லியோ முந்தும், ஆயிரம் கோடி வசூல் செய்யும் என ரிலீசுக்கு முன்பே இப்படி ஒரு அலப்பறை இதுவரை வெளியான எந்த படத்திற்கும் கொடுக்கவில்லை. இதற்கு காரணம் விஜய் என்ற ஹீரோவின் அந்தஸ்து மற்றும் லோகேஷ் தளபதியுடன் இணைந்து இருப்பது தான் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் ஜெயிலர் படத்தை கலாநிதி மாறன் இவ்வாறு எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமல் படத்தை வெளியிட்டு பல கோடி லாபம் பார்த்தார். கிட்டத்தட்ட 650 கோடிக்கு அதிகமாக ஜெயிலர் படம் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அதனால் தான் ஒரு தனி செல்வாக்குடன் சன் பிக்சர்ஸ் தற்போதும் இருந்து வருகிறது.

Trending News