Leo Movie – Leo Scam: நடிகர் விஜய் நடித்த லியோ படம் கடந்த 19ஆம் தேதி உலகம் எங்கும் ரிலீசானது. பட குழு பக்காவாக பிளான் பண்ணி ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ததால் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திருவிழா போல் கூடியது. இருந்தாலும் லியோ படத்திற்கு இதுவரையிலும் கலவையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டு இருக்கிறது.
திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே பிரச்சனை, லாபத்தில் எத்தனை சதவீதம் பங்கு கொடுக்க வேண்டும் என பிரச்சனை, லோகேஷ் கனகராஜின் முதல் தோல்வி படம் என ஒரு பக்கம் பேச்சு. அனிருத் லியோ படத்தின் ஒரு பாட்டை ஆங்கிலப் படத்தில் இருந்து காப்பி அடித்து விட்டார் என ஒரு பக்கம் பிரச்சனை, என லியோ சூறாவளி தளபதி விஜய்யை சுழற்றிக் கொண்டிருக்கிறது.
இப்படி பிரச்சனைக்கு மேல் பிரச்சனை சூழ்ந்து கொண்டிருந்த நேரத்தில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் லியோ டிகாப்ரியோ நடித்த கில்லர் ஆப் தி பிளவர் மூன் என்னும் படத்தின் வசூலை லியோ தாண்டி விட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியானது. ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் இதற்காக சந்தோஷப்பட்டாலும் மற்றொரு பக்கம் இது உண்மையா என அலசி ஆராய ஆரம்பித்து விட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.
இந்த விஷயம் தவறான தகவல் என சொல்லப்படுகிறது. இதனால் நேற்று முதல் லியோ ஸ்கேம் என்னும் ஹேஷ் டாக் ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது. இதனால் விஜய் பயங்கர கடுப்பாக இருக்கிறார். இது போன்ற பொய்யான வசூல் தகவல்களை பரப்புவது படத்தின் தயாரிப்பாளர் லலித் தான் என நேற்றிலிருந்து செய்திகளும் வெளியாகி கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே படத்திற்கு நெகடிவ் விமர்சனம் கிடைத்ததால் விஜய் பயங்கர டென்ஷனில் இருக்கிறாராம். இதில் தேவை இல்லாமல் இந்த வசூல் பிரச்சனை வேற ஏற்பட்டதால் தயாரிப்பாளர் லலித்தை அழைத்து விஜய் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். உங்க இஷ்டத்துக்கு எல்லாம் வசூல் விவரத்தை வெளியில் விடக்கூடாது என மிரட்டி விட்டு இருக்கிறார்.
இனிமேல் லியோ படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் என்ன என்ற விவரம் வெளியில் வராதாம். வாரத்திற்கு ஒரு நாள் மொத்த வசூல் விவரத்தையும் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஷ்டத்திற்கு 500 கோடி, 1000 கோடி என வசூல் விவரத்தை சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் தலையில் குட்டு வைத்தது போல் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.