வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

குணசேகரன் எடுத்த பேரும் புகழையும் ஊத்தி மூடப் போகும் ஜான்சி ராணி.. மொத்தமாக சொதப்பும் எதிர்நீச்சல் டீம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஒரு காலத்தில் எப்படி இருந்தது. இப்பொழுது மொத்தமாகவே தடுமாறி போய்விட்டது. சின்னத்திரையில் ஒரு பிரம்மாண்டத்தை உருவாக்கி இருக்கிறது என்றால் அது எதிர்நீச்சல் தான். அந்த அளவிற்கு நாலா பக்கமும் இந்த நாடகம் மக்கள் மனதில் சிம்ம சொப்பனமாக ஒய்யாரத்தில் நின்றது.

ஆனால் தற்போது கதையும் இல்லை கொஞ்சம் கூட லாஜிக்கும் செட்டாகவில்லை என்று சொல்லும் அளவிற்கு மட்டமான கதையை வைத்து உருட்டிட்டு வருகிறார்கள். போற போக்க பாத்தா இந்த நாடகம் இருக்கும் இடம் தெரியாமலேயே போய்விடும். அதிலும் ஜான்சி ராணி பண்ற அலப்பறை கொஞ்சம் கூட பார்க்க சகிக்க முடியலை. காமெடி என்கிற பெயரில் வாயைத் திறந்தாலே நாராசமாக பேச்சுக்கள் தான் வருகிறது. இதுல மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது இந்த நாடகத்தில் உள்ள வசனம் தான்.

ஆனால் அதுவே இப்பொழுது பிடிக்காமல் போய்விட்டது. இதை வச்ச எல்லாம் பார்க்கும் பொழுது கடந்த இரண்டு வருடமாக இந்த நாடகத்துக்கு ஒன் மேன் ஆர்மியாக உயிரூட்டி வந்தது குணசேகரன் என்கிற கதாபாத்திரம் தான். அதாவது பொதுவா சொல்வார்களே ஒருவர் இல்லாத போது தான் அவர்களுடைய அருமை தெரியும். அதுபோல தான் குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து இல்லாததால் நாடகமே தலைகீழாக மாறிவிட்டது.

இத்தனை வருத்தமாக குணசேகரன் சேர்த்து வைத்த மொத்த பெயரையும் கெடுக்கும் அளவிற்கு கதை சுவாரசியமே இல்லாமல் இருக்கிறது. அதிலும் சக்தி மற்றும் ஜனனி உடைய நடிப்பு ரொம்பவே தூக்கலாக இருக்கும். அப்படிப்பட்ட இவர்களை ஊமையாக்கி கொண்டு டயலாக்கும் இல்லாமல் நடிப்பும் இல்லாமல் வெறும் சோளக்காட்டு பொம்மையாகவே வேடிக்கை பார்க்கும் அளவிற்கு கதாபாத்திரம் அமைந்து வருகிறது.

இது என்னடா இந்த நாடகத்திற்கு வந்த சோதனை என்பது போல் பார்ப்பவர்கள் மிக மோசமான கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள். அதிலும் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி கேரக்டரை ஆரம்பத்தில் மக்கள் ரொம்பவே ஆர்வமாக ரசித்துப் பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது இவர்களுடைய நடிப்பும் பேச்சும் சுத்தமாக பிடிக்கவில்லை என்று வெறுக்கும் அளவிற்கு மொத்த கதையும் சொதப்பலாக அமைகிறது.

இதற்கு பேசாமல் நல்ல பெயர் இருக்கும் பொழுதே இந்த நாடகத்தை முடிச்சு விடுங்க என்று மக்கள் அவர்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் இந்த திருவிழா நிகழ்ச்சியை ஒரு துருப்புச் சீட்டாக வைத்து எதிர்பாராத ட்விஸ்ட்டுகளை கொண்டு வர இருக்கிறார்கள். அட்லீஸ்ட் அதற்குப் பிறகு பார்க்கிற மாதிரி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News