Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் திருவிழா நிகழ்ச்சியில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கப் போகிறது மாதிரி பல நாட்களாக ஜவ்வு மாதிரி இழுத்து அடித்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் ஈஸ்வரி சொன்ன அனைத்து உண்மைகளையும் கேட்ட ஜீவானந்தம் ரொம்பவே கோபமாக குணசேகரன் உயிரை நான் எடுக்காமல் விடமாட்டேன் என்று ஆக்ரோஷமாக பேசினார்.
அந்த வகையில் ஜீவானந்தம் இப்ப வரை என்ன ஆனார் என்று தெரியாத அளவிற்கு சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. இதுல வேற ஜீவானந்தம் இந்த நிகழ்ச்சிக்கு வருவார் என்று அப்பத்தா அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரிடம் இருந்து எந்த தகவலும் வராததால் ஈஸ்வரிடம் போய் ஜீவானந்தத்திற்கு போன் பண்ணினேன் லயன் போக மாட்டிற்கு என்று சொல்கிறார். அத்துடன் உனக்கு ஏதாவது தெரியுமா ஈஸ்வரி என்று கேட்கிறார்.
அதற்கு ஈஸ்வரி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி விடுகிறார். அந்த நேரத்தில் ஜீவானந்தத்தின் மகள் வெண்பா ஈஸ்வரியை கேட்டு அடம்பிடித்ததால் ஃபர்கானா அவரிடம் வந்து ஒப்படைத்து விடுகிறார். உடனே ஈஸ்வரியும் அந்த வீட்டில் உள்ள மற்ற பெண்களும் வெண்பாவை யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக பாதுகாத்து வருகிறார்கள்.
அடுத்ததாக நந்தினி கதிரை தேடி போகும்போது அங்கே குணசேகரன், வளவன், கதிர் அனைவரும் ரொம்ப சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசுவதை நந்தினி பார்த்து விடுகிறார். அத்துடன் வளவனை பார்த்து இவர் யாரு புதுசா இருக்கிறாரே என்று யோசிக்கிறார். அதே நேரத்தில் நந்தினி வந்துவிட்டார் என்பதை குணசேகரன் மற்றும் கதிர் தெரிந்து கொண்டதால் அவரை டைவர்ட் பண்ணி அனுப்பி விடுகிறார்.
பொதுவாக நந்தினி மற்ற மருமகள்களை விட ரொம்பவே மூளையை ஷார்ப்பாக வைக்கக் கூடியவர். அப்படிப்பட்ட இவர் இந்த விஷயங்களை பார்த்ததால் கண்டிப்பாக குணசேகரன் போடும் பிளானை மோப்பம் பிடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் இந்த மாதிரி ஒரு புது நபர் வந்திருக்கிறார் என்ற உண்மையையும் ரேணுகா மற்றும் ஜனனிடம் சொல்லிவிடுவார். அதனால் அவர்கள் ரொம்பவே உஷாராக அப்பத்தாவை பாதுகாக்க போகிறார்கள். ஏனென்றால் இவர்களால் அப்பத்தா உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற நோக்கத்தினால் தான்.
அதற்கு அடுத்து ஜீவானந்தம் இந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வரப்போகிறார். வந்ததும் குணசேகரன் செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பார். ஆனால் இந்த ஈஸ்வரிக்காக, குணசேகரனை பெருசாக ஏதும் பண்ணப்போவதில்லை. இதனால் குணசேகரனை விட்டுவிடுவார். உடனே இதுதான் சான்ஸ் என்று ஜீவானந்தத்தை மடக்கப் போகிறார் குணசேகரன். ஆக மொத்தத்தில் இந்த ஈஸ்வரியால் ஜீவானந்தத்திற்கு பெரிய பிரச்சனை வரப்போகிறது.
Also read: ஜீவானந்தத்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சைக்கோ.. அடைக்கலம் கொடுக்க போகும் குணசேகரனின் மனைவி