Kushboo – Prabhu: நடிகர் பிரபு நடித்த சின்னத்தம்பி திரைப்படம் இன்றைய காலகட்ட இளைஞர்களால் கிரிஞ்சாக பார்க்கப்பட்டாலும், ஒரு காலகட்டத்தில் எவர்கிரீன் வெற்றி படமாக இருந்தது. இன்று வரை இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இயக்குனர் பி வாசு இயக்கத்தில் பிரபு இணைந்த மூன்றாவது படம் இது.
1991 ஆம் ஆண்டு ரிலீசான சின்னத்தம்பி படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். குஷ்பூவுக்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது இந்த படம். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 80 லட்சம் தான். ஆனால் சின்னத்தம்பி படம் ஒன்பது கோடியே 20 லட்சம் வசூலித்தது. கிட்டத்தட்ட 9 தியேட்டர்களில் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம் இது.
நடிகர் பிரபுவின் சம்பளம்:
படத்தின் கதையைப் பார்த்தால் சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அதில் கமர்சியல் படத்திற்கான மசாலாக்களை வைத்து வெற்றி பெற செய்திருந்தார் பி வாசு. நடிகர் பிரபுவுக்கு இது 84 ஆவது படம் ஆகும். இந்த படத்தின் வெற்றிக்கு மற்றும் ஒரு காரணம் இளையராஜா. சின்னத்தம்பி படத்தின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட்.
80 லட்சம் பட்ஜெட் ஆக இருந்த இந்த படத்தில் பிரபுவுக்கு 11 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரபுவின் சினிமா கேரியரில் இது முக்கியமான படம் ஆகும். நூற்றுக்கும் மேல் படங்களில் நடித்திருக்கும் பிரபு சின்னதம்பி படத்திற்கு கிடைத்த அளவுக்கு, இதுவரை நான் நடித்த எந்த படங்களுக்குமே வரவேற்பு கிடைத்ததில்லை என்று சொல்லி இருக்கிறார்.
நடிகை குஷ்பூவின் சம்பளம்:
சின்னத்தம்பி படத்தில் குஷ்பூ நடிக்க கூடாது, வேற நடிகை தான் வேண்டும் என நிறைய தயாரிப்பாளர்கள் வாசுவிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் வாசு குஷ்பூ வேண்டாம் என்றால் நான் இந்த படமே பண்ணவில்லை என்று சொல்லிவிட்டாராம். உண்மையில் சின்னத்தம்பி படத்தின் வெற்றிக்கு குஷ்பூ முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
இந்த படத்திற்காக குஷ்பூ 4 லட்சம் சம்பளமாக வாங்கி இருக்கிறார். சின்னத்தம்பி படத்திற்கு பிறகு தான் தமிழ்நாட்டில் குஷ்புவுக்கு ஒரு ரசிகர் கோயில் கட்டி இருந்தார். அதேபோன்று குஷ்பூவைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரு ரசிகர் ரத்தத்தினால் கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். சின்னத்தம்பி படம் அந்த அளவுக்கு அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.