செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரதீப்புக்கு ரெட் கார்டு காட்டிய போட்டியாளர்கள் யார் தெரியுமா?. குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையா போச்சு

Pradeep Red Card: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி நேற்று ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதுவரை நடந்த சீசன்களில் இந்த தடவை தான் முதல்முறையாக ஒரு போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா, வேண்டாமா என போட்டியாளர்கள் இடையே கருத்து கேட்கப்பட்டது. அதில் அதிகமான பேர் ரெட் கார்டு கொடுக்க சொன்னதால் பிரதீப் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

பிரதீப் ஆண்டனியை தவிர்த்து பிக் பாஸ் வீட்டிற்குள் 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதில் 12 பேர் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஐந்து பேர் வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் போட்டியாளர்களின் கருத்து என்னவாக இருந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

பிரதீப் ரொம்பவும் அவமரியாதையாக பேசுகிறார் என்று சொல்லி இருந்த ஜோவிகா அவருக்கு ரெட் கார்டு தான் கொடுத்தார். என் இடுப்பில் இருக்கும் கயிரைப் பற்றி கமெண்ட் செய்கிறார் என்று சொல்லி இருந்த ரவீனாவும் ரெட் கார்ட் தான் கொடுத்தார். அவருடன் சேர்ந்து ஐஷு, அக்ஷயா, மணி, கானா பாலா, பிராவோ, விஷ்ணு, விக்ரம், நிக்சன் ஆகியோர் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தார்கள்.

Also Read:போட்டியாளர்களுக்கு அல்வாவை கொடுத்த கமல்.. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பிக் பாஸ்

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த போட்டியாளர்கள் அத்தனை பேரும் மாயா மற்றும் பூர்ணிமாவின் மூளைச்சலவையால் தான் கொடுத்து இருக்கிறார்கள் என நெட்டிசன்கள் அவர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். பிரதீப்பை பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கிறது என்று மாயாவும், இரவு நேரத்தில் பிரதீப் இருக்கும் இடத்தில் தூங்க கூட பயமாக இருக்கிறது என்று சொன்ன பூர்ணிமாவும் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருக்கிறார்கள்.

இந்த வார பிரச்சனை ஆரம்பித்ததே கூல் சுரேஷை பிரதீப் தகாத வார்த்தையால் திட்டினார் என்பதால் தான். ஆனால் கமலஹாசன் கூல் சுரேஷை கூப்பிட்டு ரெட் கார்டு பற்றி கேட்டதற்கு இல்லை பிரதீப் போட்டியில் நீடிக்க வேண்டும் என கூல் சுரேஷ் சொல்லிவிட்டார். தினேஷ் தான் பிரதீப்புக்கு போட்டி என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், தினேஷ் அவருக்கு நெட் கார்டு கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார்.

இந்த சீசனின் முக்கிய போட்டியாளரான விசித்ரா பிரதீப்புக்கு எச்சரிக்கை கொடுத்தால் மட்டும் போதும் ரெட் கார்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவரை தொடர்ந்து அர்ச்சனா, அன்ன பாரதி ஆகியோரம் ரெட் கார்டு கொடுக்க வேண்டாம் என்று தான் சொல்லியிருந்தார்கள். நேற்று வரை பிரதீப்பின் செயலுக்கு கண்டனங்கள் இருந்தாலும், அவரை வெளியேற்றியது தப்பு என பொதுமக்கள் சொல்லி இருக்கிறார்கள்.

Also Read:திடீர்னு கட்டிப்புடிச்சு, முத்தம் கொடுத்துட்டார்.. புகாரில் சிக்கிய பிக் பாஸ் பெண் போட்டியாளர்

Trending News