Japan, Jigarthanda First Day Collection: இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரவெடியாக தியேட்டரில் எக்கச்சக்க படங்கள் வெளியானது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு படங்கள் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜோக்கர் என்ற அற்புதமான படத்தை கொடுத்த ராஜு முருகன் ஜப்பான் படத்தை எடுத்திருந்தார். கார்த்தி மற்றும் அனு இமானுவேல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த சூழலில் ஜப்பான் படத்திற்கு போட்டியாக எஸ்ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் வெளியாகி இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை கொடுத்துள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
இப்போது ஜப்பான் படத்தை காட்டிலும் ஜிகர்தண்டா படத்திற்கு தான் ரசிகர்கள் அதிகம் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் முதல் நாள் கலெக்ஷன் பொறுத்தவரையில் இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வசூலை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கார்த்திக்கு முன்னதாக கைதி மற்றும் விருமன் படங்கள் நல்ல ஓபனிங் கொடுத்து இருந்தது.
Also Read : ரஜினியிடமே வாலாட்டிய லாரன்ஸ்.. மொத்த நம்பிக்கையும் இழந்ததால் வெறுத்துப்போன சூப்பர் ஸ்டார்
அதேபோல் ஜப்பான் படமும் முதல் நாளில் 2.4 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கிறது. மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இப்படம் 1.5 கோடியும், தெலுங்கானாவில் அதிகபட்சமாக 0.9 கோடியும் வசூல் செய்துள்ளது. மேலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஜப்பானை காட்டிலும் சற்று கூடுதலான வசூலை பெற்றிருக்கிறது.
அந்த வகையில் உலகம் முழுவதும் முதல் நாளில் 2.74 கோடி வசூலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 1.8 கோடி வசூலும் செய்திருக்கிறது. தெலுங்கானாவை பொருத்தவரையில் 0.94 கோடி வசூல் பெற்றுள்ளது. ஆகையால் கிட்டத்தட்ட ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் ஒரே மாதிரியான வசூலை தான் பெற்றிருக்கிறது.
ஆனால் வரும் நாட்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த இரு படங்களின் வசூலுமே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு இப்போது விமர்சன ரீதியாக பாராட்டை கிடைப்பதால் ஜப்பானை விட அதிக வசூலை இந்த படம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.