சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ஜப்பானை ஓரங்கட்டிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. 2ம் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

Jigarthanda Doublex Movie Collection: கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் மற்றும்  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் கடந்த 10ம் தேதி வெளியாகி  திரையரங்கில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்நிலையில் இரண்டு நாட்களின் வசூல் ரிப்போர்ட்டின் படி  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமானது கார்த்தியின் ஜப்பானை ஓரங்கட்டி விட்டது.

ராஜுமுருகன் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவான ஜப்பான் படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ஓரளவு நல்ல ஓபனிங் கிடைத்தது. ஆனால் இந்த படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் கமெண்ட்களால் இரண்டாம் நாள் வசூல் பாதிப்படைந்தது.

இதனால் முதல் நாளில் 4.10 கோடியை அள்ளிய ஜப்பான் இரண்டாம் நாளில் வெறும் 3 கோடியை மட்டுமே வசூலித்தது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

Also read: Jigarthanda Double X Movie Review- ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தீபாவளி சரவெடியா, ஊசி வெடியா.? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கொடுக்கின்றனர். இந்தப் படம் 1975 ஆம் ஆண்டு நடக்கும் பீரியட் ஜானரில்  உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு  முதல் நாளில் ஓப்பனிங் குறைவாக இருந்தாலும் பாஸிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.

 இதனால் இரண்டாம் நாளில் இதன் வசூல் இரட்டிப்பானது. முதல் நாளில் இந்த படத்திற்கு 2.5 கோடி மட்டுமே வசூல் ஆனது. ஆனால் இரண்டாம் நாளில் 4.55 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வெளுத்து வாங்குகிறது.

இது மட்டுமல்ல இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் நிச்சயம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல் ஏறுமுகத்தில் தான் இருக்கப்போகிறது. இதனால் இந்த படத்திற்கு அதிக ஸ்கிரீனிங்கை ஒதுக்கி கல்லா கட்ட பார்க்கின்றனர்.

Also read: ஜப்பானை முந்தியதா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

- Advertisement -spot_img

Trending News