சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தீபாவளி அதுவுமா சிவகார்த்திகேயன் போட்ட பதிவு.. என்ன நடந்தாலும் நா சந்தோசமா இருப்பேன்

Actor Sivakarthikeyan: நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கோலங்களும் கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலரும் தீபாவளி தினத்தன்று தங்களுடைய கொண்டாட்டங்களை புகைப்படத்தின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் போட்ட பதிவு சினிமா ரசிகர்களில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது இவரால் எப்படி இதுபோல் நடந்து கொள்ள முடிகிறது, என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் இமான் இருவருக்கும் இடையே நடந்த பிரச்சனை ஊர் அறிந்த விஷயம் தான். சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாக இமான் பேசி பெரிய பிரச்சனையை கிளப்பினார். அவர் எதையும் தெளிவாக சொல்லாததால் வியூகங்கள் இருவரின் குடும்பங்களை பற்றி எழுந்தது.

போதாத குறைக்கு வலைப்பேச்சு அந்தகன், சிவகார்த்திகேயன் மற்றும் இமானின் முன்னாள் மனைவி மோனிகா இருவரும் பேசிய ஆபாச உரையாடல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் தன்னிடம் இருப்பதாக ஒரே போடாக போட்டிருக்கிறார். சிவகார்த்திகேயனை சுற்றி இத்தனை நெகட்டிவ் பேச்சுக்கள் எழுந்தாலும் இதுவரை அவர் எந்த பதிலும் கொடுக்கவில்லை.

Also Read:மொட்ட ராஜேந்தரை விட்டுக் கொடுக்காத 5 ஹீரோக்கள்.. பீடி அடித்ததில் இருந்து பென்ஸ் கார் வரை செய்த பயணம்

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் சிவகார்த்திகேயன் நேற்று தன்னுடைய குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய குடும்பம் தீபாளி வாழ்த்துக்கள் சொல்வதாகவும் பதிவிட்டு இருக்கிறார். அவருடைய ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்

 

SK
SK

இமானின் குற்றச்சாட்டுகளுக்கு எதற்குமே சிவகார்த்திகேயன் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. தான் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை ரசிகர்களுக்கு மறைமுகமாக தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் சுற்றி இருந்த அத்தனை சர்ச்சைகளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வைத்து பதிலடி கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நினைத்திருந்தால் தன்னுடைய பவரை வைத்து மீடியாவை அழைத்து என்ன வேண்டுமானாலும் பண்ணியிருக்கலாம். ஆனால் ஒரு வதந்தியை ஆறப் போட்டாலே அதை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார்.

Trending News