Jaffer Sadiq Girlfriend: விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் தான் ஜாஃபர் சாதிக். பாவ கதைகள் என்னும் குறும்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்ததின் மூலம் சினிமாவுக்கு பரீட்சையமானார். பின்னர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார். கையில் கட்டிங் பிளேடு வைத்து எதிரிகளின் கால் நரம்பை கட் பண்ணும் காட்சிகளில் வில்லத்தனத்தை காட்டியிருப்பார். அதே நேரத்தில், கமலஹாசனின் கால் நரம்பை வெட்ட முயற்சி செய்து அவரிடம் மொக்கை வாங்கும் காமெடி காட்சியில் தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார்.
பின்னர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ஜாஃபருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்திலும் நன்றாக நடித்து கவனத்தைப் பெற்ற ஜாஃபர் சாதிக் வெந்து தணிந்தது காடு படத்திலும் சின்ன ரோலில் வந்தார். மூன்று படங்களே நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி கொஞ்ச நாட்களில் ஜாபர் சாதிக்கின் காதலியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. அவருக்கு குறைவான உயரம் தான் சினிமாவில் அடையாளம் என்றாலும், அவருடைய காதலி நல்ல உயரமாக இருக்கிறார், அழகாக இருக்கிறார் என பலரும் கமெண்ட் செய்து வந்தார்கள்.
ஜாஃபர் சாதிக்கின் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படம்
ஜாஃபர் சாதிக் தீபாவளி தினத்தன்று தன்னுடைய காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். பட்டு வேஷ்டி மெரூன் கலர் சட்டை என கல்யாண மாப்பிள்ளை போல இருக்கிறார். அவருடைய காதலி பட்டு சேலை கட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
ஜாஃபர் நடிகர் மட்டும் இல்லாமல் நடன கலைஞரும் கூட. கோரியோகிராஃபராக இருக்கும் இவர், நடன பள்ளியும் நடத்தி வருகிறார். அவருடைய காதலி சித்திகாவும் நடன கலைஞர் தானாம். தன்னுடைய காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய அவர், திருமணத்தை பற்றி அதிகாரபூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை.
Also Read:தனுஷ், விக்ரம் படத்த தியேட்டர்ல வர விடல.. தயாரிப்பாளரின் முகத்திரையை கிழித்த பிரபல இயக்குனர்