திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

5 தமிழ் ஹீரோக்களை நேரடியாக ஹிந்தி படங்களில் நடிக்க வைக்கும் அட்லி.. கமலுக்கு போட்ட ஸ்கெட்ச்

Atlee To Cast 5 Tamil Heroes: தெறி, மெர்சல், பிகில் போன்ற விஜய் படங்களை வரிசையாக இயக்கி தமிழ் சினிமாவில் தளபதியின் ஆஸ்தான இயக்குனராக ரவுண்டு கட்டியவர் தான் இயக்குனர் அட்லி. இவர் ஷாருக்கான் வைத்து பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் என்ட்ரி ஆனார்.

இவர் மட்டுமல்ல இந்த படத்தின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் பாலிவுட்டிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும் மறுபடியும் அடுத்தடுத்து ஹிந்தி படங்களை தான் இயக்க ஆர்வம் காட்டுகிறார்.

இப்போது அட்லியின் அடுத்த பிளான் தமிழ் ஹீரோக்களை நேரடியாக ஹிந்தி சினிமாவில் நடிக்க வைக்க போவதுதான். அதிலும் முதலில் இந்த ஐந்து ஹீரோக்களை வைத்து பாலிவுட்டில் படம் பண்ண வேண்டும் என அட்லி உறுதியுடன் இருக்கிறார்.

Also read: பிரதீப் வாயை திறந்தால் மொத்தமும் காலி.. மரண பீதியில் மாயா மறைக்கும் உண்மை

உலக நாயகனுக்கு போட்ட ஸ்கெட்ச்

முதலில் கமலுக்கு தான் பெரிய ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருக்கிறார். அட்லி ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதையை கையில் வைத்திருக்கிறார். இதில் ஷாருக்கான் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரையும் நடிக்க வைப்பது தான் திட்டம்.

இதற்கு ஷாருக்கானும் ஓகே சொல்லிவிட்டதால், அடுத்து கமலுக்குரிய ஸ்கிரிப்ட்டை தயார் செய்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கான் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார். அட்லியுடன் ஷாருக்கான் கமலை வைத்து இந்த படத்தை எடுத்து நல்ல பிசினஸ் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக விஜய்க்கும் அட்லி வலை விரித்து இருக்கிறார். அவரை வைத்து பாலிவுட்டில் ஒரு படம் பண்ணும் ஐடியாவில் அட்லி இருக்கிறார். இவரை தொடர்ந்து ஆர்யா, சூர்யா, மாதவன் உள்ளிட்டோரை ஹிந்தி படத்தில் நேரடியாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்.

Also read: வாய்ப்பு கொடுத்தவருக்கே டிமிக்கி கொடுக்கும் விக்கி.. உன் சங்காத்தமே வேண்டான்னு கும்பிடு போட்ட ஆண்டவர்

Trending News