ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

செருப்பால அடி வாங்கிய இளவரசு.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன சக நடிகர்கள்

Actor Ilavarasu: நடிகர் இளவரசு சினிமாத்துறையில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர். இயக்குனர் இமயம் பாரதிராஜா தன்னுடைய கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நடிகராக அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதிலிருந்து காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

சென்னை 28, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, திருவிளையாடல் ஆரம்பம், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி, கலகலப்பு போன்ற படங்களில் இவருடைய நடிப்பு அதிக அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜிகர்தண்டா. அதன் இரண்டாம் பாகத்தை லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து இயக்கி கடந்த தீபாவளி அன்று ரிலீஸ் செய்திருந்தார்கள். இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடி வசூலை நெருங்கி விட்டதாக கூட சொல்லப்படுகிறது. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கிறது.

Also Read:எஸ்ஜே சூரியாவின் ட்ராக்கை மாற்றிய இயக்குனர்.. பிரஸ் மீட்டில் ஓப்பனாக பேசிய நடிப்பு அரக்கன்

இந்த படத்தின் ஒரு காட்சியில் இளவரசு செருப்பால் அடி வாங்குவது போல் நடித்திருப்பார். இவ்வளவு பெரிய குணச்சித்திர நடிகர் இப்படி செருப்பால் அடி வாங்குவது போல் நடித்திருக்கிறார் என்ற ஆச்சரியம் எல்லோருக்குமே இருந்திருக்கிறது. இந்த காட்சியை பற்றி சக நடிகர்கள் அவரிடம் எப்படி இது போன்ற ஒரு சீனில் நடித்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு இளவரசு நடிப்புன்னு வந்துட்டா எப்படி வேண்டுமானாலும் நடிக்க தான் வேண்டும். இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு எல்லாம் வருத்தப்படக்கூடாது. அப்படி வருத்தப்பட்டு நடித்துவிட்டு வாங்குகிற சம்பளத்தில் சாப்பாடு சாப்பிட்டால் செரிக்காது. செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருப்பது தான் நியாயமான விஷயம் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:கைராசியான எஸ்.ஜே சூர்யா நடித்து வெற்றி கண்ட 5 ஹீரோக்கள்.. விஷாலை தூக்கி விட்ட நடிப்பு அரக்கன்

 

 

 

 

Trending News