வசூல் பிரமாதம், காரை பரிசாக கொடுத்த முதலாளி.. பின்னாடியே சிவகார்த்திகேயனுக்கு வச்ச குண்டு

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் சீக்கிரமாகவே சினிமாவில் வளர்ச்சி அடைந்து விட்டார் என்று பலரும் கூறுவது உண்டு. ஆனால் பல பிரச்சனைகளை சந்தித்து தனது திறமையால் தான் இப்போது ஒரு நிலையான இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்திருக்கிறார். அந்த வகையில் அவரது முதல் படமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் வசூலும் படு பயங்கரமாக இருந்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் அப்போது சிவகார்த்திகேயனுக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார். இப்போது படம் அதிக வசூல் செய்தால் கார் கொடுப்பது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஆனால் அப்போதே இதை செய்ததால் சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சியாகி இருந்துள்ளார்.

ஆனால் அதில் ஒரு சூட்சமம் இருப்பது அப்போது தெரியவில்லை. அந்த காரில் போய்க் கொண்டிருக்கும் போதே சிவகார்த்திகேயனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதாவது இந்த காருக்கு 38 மாதங்கள் இஎம்ஐ கட்ட வேண்டும் என்பது தான் அந்த செய்தி. இதை பார்த்த ஒரு கணம் சிவகார்த்திகேயன் அதிர்ந்து போய்விட்டாராம்.

அப்போது தான் சிவகார்த்திகேயன் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அடுத்த படம் கிடைக்குமா, எவ்வளவு சம்பளம் என்பதெல்லாம் தெரியாத நிலையில் மிகவும் குறிப்பிட்ட தொகையை காருக்கு இஎம்ஐ கட்ட இயலாது. எனவே இந்த கார் தனக்கு வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.

அதன் பின்பு சிவகார்த்திகேயன் சினிமாவில் அபரிவித வளர்ச்சி அடைந்துவிட்டார். அவரது சொந்த சம்பாத்தியம் மூலமாகவே பல கார்களையும் வாங்கி குவித்துள்ளார். ஆனாலும் சிவகார்த்திகேயன் ஆரம்பம் இப்படி தான் இருந்தது என்பது ஆச்சரிய படம் விதமாக தான் இருக்கிறது.