வெள்ளிக்கிழமை, நவம்பர் 29, 2024

ஈஸ்வரி வேலைக்கு வேட்டுவைத்த குணசேகரன்.. கல்லூரிக்கு போய் வேதம் ஓதிய 4 சாத்தான்கள்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் பழைய மாதிரி மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் குணசேகரன், அப்பத்தா இல்லாவிட்டால் வீட்டில் இருக்கும் மருமகள்கள் மறுபடியும் அடிமையாகி வீட்டிலேயே முடங்கி கிடப்பார்கள் என்று பல சதி வேலைகளை செய்திருக்கிறார். ஆனால் இதுவே இவருக்கு தற்போது எதிராக திரும்பி விட்டது.

அப்பத்தா இறப்பிற்கு குணசேகரன் தான் காரணமாக இருப்பார் என்று வீட்டில் உள்ள மருமகள்கள் நினைக்கிறார்கள். அதனால் இனியும் குணசேகரனுக்கு அடிமையாக இருப்பது பிரயோஜனம் இல்லை என்று முடிவு பண்ணி விட்டார்கள். அதனால் ஈஸ்வரிக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கு துணிந்து விட்டார். இதில் குணசேகரன் வேலைக்கு போகக்கூடாது என்று ஈஸ்வரிடம் சொல்லிய பொழுது எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் பார்க்க வேண்டும்.

அதற்கு நாங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். அதனால் நீங்க சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.  நான் வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டேன் என்று தீர்மானமாக சொல்லுகிறார். இதை கேட்ட குணசேகரன் அமைதியாக நிற்கிறார். அடுத்தபடியாக அப்பத்தா இறப்பில் இருக்கும் முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக ஜனனி மற்றும் சாருபாலா முயற்சி எடுத்து வருகிறார்கள்.

Also read: பாக்கியா தலையில் விழுந்த பெரிய இடி.. ஆனந்த கூத்தாடும் கோபி, காலை வாரி விடும் மாமி

அந்த வகையில் ஜீவானந்தம் மீது குற்றம் சாட்டப்பட்ட விசாரணையே மறுபரிசலினை செய்வதற்கு கோர்ட் உத்தரவு போட்டு இருக்கிறது. அதனால் எப்படியும் சாருபாலா குணசேகரனுக்கு எதிரான விஷயங்களை திரட்டி ஜீவானந்தத்தை வெளியில் கூட்டு வந்து விடுவார். இந்த விஷயம் குணசேகரனுக்கு தெரிந்ததும் சக்தி ஜனனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

அதற்கு சக்தி ஒரே பதிலாக அப்பத்தா இறப்பிற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று குணசேகரனிடம் சவால் விடுகிறார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி கல்லூரிக்கு சென்று என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்னால் வேலை பார்க்க முடியாது என்று ஒரு குண்டை தூக்கி போடுகிறார். இதில் ஜனனி மற்றும் சக்தி எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் ஈஸ்வரி இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

ஆனால் இவருடைய முடிவுக்கு பின்னால் கண்டிப்பாக குணசேகரனின் சூழ்ச்சி இருக்கும். அந்த வகையில் குணசேகரன், கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் நான்கு பேரும் ஈஸ்வரி வேலை பார்க்க போகும் கல்லூரிக்கு போகிறார்கள். அங்கே போனதும் குணசேகரன் மற்றும் கதிர் அடாவடித்தனத்தை காட்டியிருப்பார்கள். இதனால் ஈஸ்வரி இனிமேலும் இங்கே வேலை பார்த்தால் இப்படித்தான் இவர்கள் தொந்தரவு பண்ணுவார்கள் என்று வேலையை ரிசைன் பண்ணுகிறார்.

Also read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்களின் லிஸ்ட்..மொத்த ரேட்டிங்கையும் வாரி சுருட்டிய ஒரே சேனல்

- Advertisement -spot_img

Trending News