Murali: நடிகர் முரளி 1984 ஆம் ஆண்டு பூவிலங்கு என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர். முதல் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இதெல்லாம் ஒரு மூஞ்சியா என கூட்டத்தில் இருப்பவர்கள் கேலி செய்யும் அளவிற்கு தான் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. அதையும் தாண்டி இன்று தமிழ் சினிமா என்றுமே மறக்காத நடிகர்களின் லிஸ்டில் முரளி இருப்பதற்கு முக்கியமான காரணமும் இருக்கிறது.
ஹீரோ என்றால் பளிச்சென்று முகம், பளபளக்கும் சட்டை, என்ட்ரி கொடுக்கும் பொழுதே 10 பேரை தூக்கி அடித்து வீசிவிட்டு தான் வர வேண்டும் என்று அப்போதைய சினிமா இருந்தது. முகத்தில் எப்போதும் ஒரு தனிப்பட்ட சோகம், இயல்பான நடிப்பு, பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் ஒரு முகம், காதல், ஏக்கம், காதலின் தவிப்பு, காதலிக்கு அடங்கி போவது என ஹீரோவிலேயே இவர் வித்தியாசமாக தெரிந்தார்.
Also Read:சின்ன தூண்டில்ல மொத்த கஜானாவையும் ரொப்பிய 5 படங்கள்.. ஜம்முனு செட்டிலான அசோக் செல்வன்
20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நிறைய பேர். அதில் முக்கியமானவர் முரளியும் கூட. அந்த சமயத்தில் ராமராஜன் ஹிட்ஸ், மோகன் ஹிட்ஸ் என்று இருந்தது போல் முரளி ஹிட்ஸ் என ரசிக்க வைக்கும் பாடல்களும் இருந்தன. முரளியின் வெற்றிக்கு அடித்தள காரணமாக அமைந்தது இளையராஜாவின் இன்னிசைகள்தான். மோகனுக்குப் பிறகு மேடையில் மைக் பிடித்து பாடிய நடிகர் இவர் என்று கூட சொல்லலாம்.
இதயம் முரளியாய் நிலைத்து நிற்பவர்
தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு முரளி எந்தவித சமயத்திலும் தொந்தரவு கொடுத்ததே இல்லை. சூட்டிங்கிற்கு அமைதியாக வந்துவிட்டு அமைதியாக போய்விடுவாராம். அதேபோல் யாருடனும் நடிக்க மாட்டேன் என்று விதண்டாவாதம் செய்ததே கிடையாது. சின்ன பட்ஜெட்டில் நிறைய படங்களில் நடித்து தயாரிப்பாளர்களுக்கு அதிகமான வசூலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக நடித்துக் கொண்டிருந்த முரளி மற்றவர்களை போல் தமிழ் சினிமாவால் கொண்டாடப்படாமல் போய்விட்டார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய குடிப்பழக்கம் என்று சொல்லப்படுகிறது. 2006ம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் முரளி இருந்து விட்டார். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு பானா காத்தாடி படத்தில் நடித்தார்.
இதயம் முரளி என்று மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் முரளி பானா காத்தாடி படத்தின் மூலம் தன்னுடைய மகன் அதர்வாவை ஹீரோவாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டார். அதர்வாவை ஒரு நல்ல ஹீரோவாக பார்ப்பதற்கு முன்னே முரளி மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் அப்பாவின் பெயரை காப்பாற்றும் அளவுக்கு அதர்வா இதுவரைக்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம் தான்.
Also Read:அவருக்கு படமே எடுக்கத் தெரியாதுன்னு அறிக்கை விட்ட சூர்யா.. வாழ வைத்தவரை மார்பில் மிதித்த சிங்கம்