சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பிரேம் டைமில் கொடிக்கட்டி பறக்கும் சன் டிவி சேனல்.. எதிர்நீச்சல் காலை வாரி விட்டாலும் கெத்தா இருக்கும் சீரியல்

Prime time serial got First place: சின்னத்திரையில் எத்தனையோ சேனல்கள் போட்டி போட்டு வந்தாலும், எந்த சேனல் முதலிடத்தில் இருக்கிறது என்பதை புள்ளி விவரத்துடன் தெரிந்து கொள்வது டிஆர்பி மூலம் தான். அந்த வகையில் பல வருட காலமாக சிம்ம சொப்பனமாக மக்கள் மனதில் ஒய்யாரத்தில் இடம் பிடித்தது சன் டிவி மட்டுமே. அதற்கு காரணம் பெண்களின் உணர்வுபூர்வமான காட்சிகளை வைத்து செண்டிமெண்டாக பார்ப்பவர்களை தாக்கி வந்தது.

அத்துடன் சன் டிவிக்கு என்று ஒரு டிரேட் மார்க் உண்டு. அதற்கேற்ற மாதிரி தான் ஒவ்வொரு இயக்குனர்களும் சீரியலின் கதையை எழுதிக்கொண்டு டிஆர்பி ரேட்டிங்கை தூக்கி பிடித்து வருகிறார்கள். காலையில் கிட்டத்தட்ட 8 சீரியல்கள் மாலையில் 8 சீரியல்கள் என்று ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பிரேம் டைமில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் மவுஸ் அதிகம் தான்.

ஏனென்றால் எல்லோரும் வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஒன்றாக சேர்ந்து பார்க்கக் கூடிய நேரம் தான் அந்த பிரேம் டைம். அப்படி இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் கண்டிப்பாக டிஆர்பி ரேட்டிங்கில் வந்துவிடும். ஆனால் சற்று மாற்றும் விதமாக கடந்த இரண்டு வருடமாக பிரேம் டைமில் இல்லாமலும் முதலிடத்தில் இருந்ததற்கு காரணம் எதிர்நீச்சல் சீரியல். இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது.

Also read: இந்த ரெண்டு கேரக்டர் மறைந்து போனதால் தலைகீழாக மாறிய சீரியல்.. டிஆர்பி இல்லாமல் தடுமாறும் சன் டிவி, விஜய் டிவி

அந்த வகையில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தற்போது இல்லாததால் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பின்னடைவு அடைந்து விட்டது. இருந்தாலும் பிரேம் டைம் நாடகம் மூலமாக அதிக மதிப்பெண்களை பெற்று கெத்தாக சுற்றி வருகிறது சன் டிவி. அதில் கயல், சுந்தரி மற்றும் சிங்க பெண்ணே இந்த மூன்று சீரியல்கள் அதிக மதிப்பெண் பெற்று சன் டிவி மொத்த மதிப்பீட்டான 651 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக சன் டிவியின் மதிப்பீட்டை தொடக்கூட முடியாத அளவிற்கு 70% மதிப்பை பெற்று கீழே இருப்பது விஜய் டிவி. என்னதான் விஜய் டிவியில் புதுப்புது சீரியல்கள், வித்தியாசமான கதைகளை கொண்டு வந்தாலும் 374 மதிப்பீடுகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் கதை நன்றாக இல்லாவிட்டாலும் பிரேம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2, பாக்கியலட்சுமி சீரியல்கள் தான்.

அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பது ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்கள் அனைத்தும் வித்தியாசமாகவும், நல்ல கதைகளுடன் இருந்தாலுமே மக்களிடம் சொல்லும் படியாக ரீச் அடையவில்லை. அதற்கு காரணம் எல்லா நாடகத்தையும் ஓவர் டெக் பண்ணும் அளவிற்கு சன் டிவி சீரியல் மக்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டது. அந்த வகையில் ஜீ தமிழ் பெற்ற மதிப்பீடு 274 புள்ளிகள். ஆக மொத்தத்தில் சன் டிவியில் பிரேம் டைமில் ஒளிபரப்பாகி வரும் நாடகத்தால் டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டி வருகிறது.

Also read: எதிர்நீச்சல் டம்மியானதால் புதிதாக களமிறங்கும் சீரியல்.. டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைக்க சன் டிவி எடுத்த புது ஆயுதம்

- Advertisement -spot_img

Trending News