சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

முத்தழகு இல்லன்னா இறுதி சுற்று மதி உருவாயிருக்க முடியாது.. அமீரை உச்சி குளிர வைத்த சுதா கொங்கரா

Ameer – Surya: 17 வருடங்களுக்கு முன் ரிலீசான பருத்திவீரன் படத்தின் சர்ச்சை இப்போது வைரலாகும் என்று யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த ஒரு பேட்டியினால் சூர்யா மற்றும் கார்த்தி சேர்த்து வைத்த மொத்த பெயரும் இப்போது ரசிகர்களிடையே அந்தலை சிந்தலை ஆகிவிட்டது. போதாத குறைக்கு பிரபல இயக்குனர்கள் பலர் அமீருக்கு ஆதரவாக ஒன்று திரண்டு வருகிறார்கள்.

சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன் என ஒவ்வொருவரும் அமீருக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஞானவேல் ராஜா சொன்னது உண்மைதான் என்று சொல்லக்கூட ஒரு ஆள் இல்லாமல் போனது தான். அவர் சொன்னது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் சூர்யா பட இயக்குனரே தன்னுடைய ஸ்டேட்மென்ட்டை கொடுத்திருக்கிறார்.

Also Read:தலைக்கு மேல வெள்ளமே போனாலும் அமீர் இல்லாம வாடிவாசல் இல்ல.. வெயிட்டான ரோல் கொடுத்திருக்கும் வெற்றிமாறன்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரை உலகில் திரைக்கதை ஆசிரியராக முதலில் இருந்தவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா. துரோகி என்னும் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். கார்த்தி மற்றும் சுதா கொங்கரா இயக்குனர் மணிரத்தினம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள். அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படத்தை பார்த்துவிட்டு அந்த படம் மேக்கிங் சரியில்லை என்று சுதா சொன்னதாக ஞானவேல் அவருடைய பேட்டியில் சொல்லி இருந்தார்.

பல்டி அடித்த சூர்யா பட இயக்குனர்

இவர்களுடைய பிரச்சனைக்குள் தலையிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சுதா, அமீருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் இறுதி சுற்று படத்தை இயக்கி ரிலீசான பின், சினிமா உலகிலிருந்து முதன் முதலில் எனக்கு போன் செய்து பாராட்டியவர் இயக்குனர் அமீர் தான்.

என்னுடைய இரண்டு படங்களில் உயிர் நாடிகளாக இருக்கும் மதி மற்றும் பொம்மி கேரக்டர்கள் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் முத்தழகு கதாபாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். ஒரு ஆணின் எழுத்தில், பெண்ணை இப்படி எல்லாம் காட்ட முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன், ஒரு படைப்பாளிக்கு நான் கொடுக்கும் மரியாதை இதுதான் என்று ட்வீட் செய்திருக்கிறார்.

பருத்திவீரனின் முத்தழகு படம் முழுக்க ரொம்பவும் தைரியமான கேரக்டராக காட்டப்பட்டு இருப்பார். அதே நேரத்தில், தான் விரும்பும் காதலனுக்காக எந்த எல்லைக்கும் போகக்கூடிய அளவுக்கு அதீத அன்பை காட்டுபவராகவும் இருப்பார். சுதா பொங்கராவின் இறுதிச்சுற்று படத்தில் வரும் மதி மற்றும் சூரரைப் போற்று படத்தில் வரும் பொம்மி கேரக்டரும் அதைப் போன்று தான் அமைக்கப்பட்டிருக்கும்.

Also Read:உண்மையான பச்சோந்தி யாரு தெரியுமா.? அமீர் செஞ்ச ஒரே தப்பை சுட்டிக்காட்டிய தயாரிப்பாளர்

- Advertisement -spot_img

Trending News