வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நேருக்கு நேர் மோத போகும் பிக்பாஸ் பாலாஜி vs தர்ஷன்.. ஜெயிக்கப் போவது யாரு தெரியுமா.?

Biggboss Balaji-Darshan: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் உலக நாயகன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனாலேயே இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இரண்டு பிரபலங்கள் நாளை நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். அதாவது இவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் நாளை வெளிவர இருக்கிறது. அதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அதன்படி ஆரியுடன் சதா நேரமும் சண்டை பிடித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த பாலாஜி முருகதாஸ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் வா வரலாம் வா நாளை வெளிவருகிறது.

Also Read: அர்ச்சனாவை இந்த 6 தகாத வார்த்தைகளால் பஜனை பாடிய விஷ்ணு.. கண்டு கொள்வாரா, கழட்டி விடுவாரா ஆண்டவர்

அதேபோன்று மூன்றாவது சீசனில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளரான தர்ஷன் நடித்திருக்கும் நாடு படமும் நாளை வெளியாகிறது. இதில் அவருடன் இணைந்து மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். இவர்களுக்கு போட்டியாக தற்போது ஹீரோவாக ஜெயித்திருக்கும் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படமும் வெளிவருகிறது.

இப்படத்தின் ப்ரிவ்யூ ஷோவுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. அதேபோன்று லேடி சூப்பர் ஸ்டாரின் அன்னபூரணியும் நாளை வெளிவர இருக்கிறது. இந்த இரண்டு படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பாலாஜி, தர்ஷன் படங்களுக்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைவு தான். அதனாலேயே ரசிகர்கள் இப்போது இந்த படங்களை ஓடிடியில் பார்க்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.

Also Read: படுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோவின் தந்தை.. பிக் பாஸில் மறைத்த சீக்ரெட், பெயரோடு போட்டுடைத்த விசித்ராவின் தோழி

Trending News