சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சிவகார்த்திகேயனை காப்பாத்த நங்கூரம் போல் நிற்கும் ரஜினிகாந்த்.. தலைவர் கட்டளைக்கு பம்மிய லோகேஷ்

Super star gave chance to sivakarthikeyan in thalaivar 171: தலைவருக்கு உரிய இலக்கணத்தோடு தன் சகாக்களை காப்பாற்றும் பொருட்டு கை தூக்கி விடுகிறார் நம் சூப்பர் ஸ்டார். தல பானியில் நமக்கு கீழே இருக்கிறவங்களை  நாம பாத்துக்கிட்டா, நமக்கு மேல இருக்கிறவன் நம்மள பாத்துப்பான்” என்கிற அடிப்படையில வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் இடரை களையும் காப்பாளனாக  சூப்பர் ஸ்டார் ரஜினி செயல்படுத்திய சம்பவமே இது.

சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களுக்கு இசையமைத்த இமான் அவர்கள் சினிமாவை தாண்டி நட்பு ரீதியாக நன்றாக பழகிய நிலையில் திடீரென்று பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தான் அவரது விவாகரத்துக்கு காரணம் என்றும், அவருக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

இமானின் மனைவியோ இதே மறுத்திருந்தார்,  சிவகார்த்திகேயனும் இதைப்பற்றி கருத்து ஏதும் கூறவில்லை எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் வெற்றியை தாங்கி வரும் இவரின் வளர்ச்சியை கெடுக்கும் விதமாக இது அமைந்திருந்தது.

Also read: ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.. சீனு ராமசாமி போல நடிகையால் சந்திசிரித்த 5 ஜாம்பவான்கள்

இந்நிலையில் ரஜினி அவர்கள் தற்போது கையில் எடுத்திருக்கும் படமான தலைவர் 171 இல் சிவகார்த்திகேயனின் களங்கத்தை காலி செய்யும் பொருட்டு இப்படத்தின் முக்கிய வேடத்திற்கு லோகேஷிடம் சிவகார்த்திகேயனை சிபாரிசு செய்துள்ளார்.  சிவகார்த்திகேயனும் தலைவர் 171-ல் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இளம் இயக்குனர்கள் முக்கியமாக லோகேஷ் தங்களது படங்களில், நாயகனாக முன்னணி நட்சத்திரத்திரத்துடன் கெஸ்ட்டு அப்பியரன்ஸ் மற்றும் கேமியோ ரோலில் மற்றுமொரு ஹீரோவை புகுத்தி ஹீட் அடிக்க இருக்கும் படங்களை பிளாக் பஸ்டர் ஹீட்டாக்கி விடுகிறார்கள்.  ரசிகர்களுக்கும் பல நட்சத்திரங்களை ஒரே படத்தில் ஒன்றாக பார்ப்பது ஆச்சரியமாகவும் புதுவிதமான அனுபவமாக அமைந்துவிடுகிறது.  இந்த நவயுக பார்முலாவை இளம் இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களில்  நடைமுறைப்படுத்தும் பழக்கமாக வைத்துள்ளனர்.

கலைஞர் விழாவில் மிரட்டப்பட்ட  அஜித் அவர்கள், தன் குற்றச்சாட்டை தைரியமாக முன்வைக்கும் போது கைத்தட்டி ஆதரித்தவரும் அவரே.  அதற்கு பின் வந்த பிரச்சனைகளுக்கு பக்கபலமாக நின்றவரும் அவரே. தற்போது சிவகார்த்திகேயனை கை தூக்கி விட்டவரும் அவரே சூப்பர் ஸ்டார்.

Also read:சூர்யாவின் நடிப்பை பார்க்க மாறுவேடத்தில் சென்ற ரஜினி.. அப்படி என்ன சூப்பர் ஹிட் படம் அது?

Trending News