ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கார்த்தி, ஆர்யாவை கழட்டிவிட்டு, பையா 2-விற்கு பிரபல வாரிசு நடிகரின் மகனை களம் இறக்கும் லிங்குசாமி

Director Lingusamy plans to direct paiyaa 2 film: பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவனுக்கு பின் கார்த்தியை சாக்லேட் பாயாக அறிமுகப்படுத்திய படம் பையா. 2010 ஆம் ஆண்டு லிங்குசாமியின் இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடித்த இப்படம் கார்த்தியின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது.

பையா  தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, பெங்காலி, கன்னடம் என பழமொழிகளிலும் வெற்றி பெற்றது. கார்த்தி, தமன்னாவுடன் காரையும் ஒரு கதாபாத்திரமாக்கி படம் முழுவதும் உலாவ விட்டிருப்பார். அறிந்த கதை தான் என்றாலும்  யுவனின் இசையோடு போர் அடிக்காமல்  இறுதிவரை படத்தை நகர்த்தி வெற்றி பெற்றிருந்தார்.

லிங்குசாமி நிகழ்ச்சி ஒன்றில் நல்ல எண்ணத்தில் தனுசை போல் பன்முக திறமையாளனாக வரப்போகிறேன் என சபதம் எடுத்து தன் மொத்த வித்தையையும் தனது படங்களில் இறக்க நினைத்தார். லிங்குசாமி இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி 2,  தி வாரியர் போன்ற படங்கள் எதிர்பார்த்த வகையில் வெற்றி அளிக்காமல் போயின.

Also read: லிங்குசாமி எடுக்கப்போகும் மறுபிரவேசம்.. வாய்ப்பு கொடுத்த அந்த 2 ஹீரோக்கள்

இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள இந்தியன் 2,  கைதி 2,  விடுதலை 2 போன்று நீண்ட இடைவெளிக்கு பின் வெற்றி படமான பையா படத்தின் பாகம் 2 டை கையில் எடுத்தார் லிங்குசாமி . பையா படத்தைப் போன்று இதன் இரண்டாம் பாகத்திற்கும்  இசைக்கு யுவன் சங்கர் ராஜாவை பிக்ஸ் பண்ணிவிட்டார்.

பையா 2 வை வெற்றி பெற வைக்கும் முனைப்போடு விடிய விடிய கதையை தீயாய் எழுதி வருகிறாராம் லிங்குசாமி. இது முந்தைய பையாவின் தொடர்ச்சியாகவோ அல்லது அதை போன்று கதை களத்துடன் வேறு விதமாக இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வத்துடன்  பாகம் 2 யை எதிர் நோக்கி உள்ளனர்.

பையா 2 படத்திற்காக முதலில் அணுகியது கார்த்தியை தான். பின்பு சில காரணங்களால் கார்த்தியை விடுத்து ஆர்யா மற்றும் ஜான்வி கபூர் நடிக்கப் போவதாக  பேசப்பட்ட நிலையில் ஜான்வி கபூர் தந்தை போனி கபூர் இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இறுதியாக மறைந்த நடிகர் இதயம் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் முரளியை இப்படத்தின் நாயகனாக தேர்வு செய்து உள்ளனர். நடிகை யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர்.

Also read: பருத்திவீரன் கார்த்தி கையில் இருக்கும் 3 அட்டகாசமான பார்ட் 2 படங்கள்.. லியோ மாதிரி சொதப்பாமல் இருப்பாரா லோகேஷ்?.

Trending News