சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறும் குழப்ப கேஸ்.. பரபரப்பாக நடக்கும் ஓட்டிங்

By Vijay · 13 டிசம்பர் 2023 · Updated 10 மே 2025
kamal-vijay tv-biggboss

Biggboss 7 Voting: கடந்த வாரம் சென்னை வெள்ளத்தின் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது. இது ரசிகர்களுக்கு கடுப்பாக இருந்தாலும் போட்டியாளர்கள் இன்னும் ஒரு வாரம் பேமென்ட் வாங்கலாம் என குஷியாக இருக்கிறார்கள்.

ஆனால் இந்த வாரம் எவிக்சன் நிச்சயம் உண்டு. அது இரண்டாக இருக்கலாம் என்று கூட எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த வார நாமினேஷனில் அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, நிக்சன், கூல் சுரேஷ், அனன்யா ஆகியோர் இருக்கின்றனர்.

இதில் வழக்கம் போல அர்ச்சனாவுக்கு தான் அதிக ஓட்டுக்கள் கிடைத்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தினேஷும் கணிசமான ஓட்டுக்களை பெற்றிருக்கிறார். அதற்கு அடுத்தடுத்த இடங்களை விஷ்ணு, நிக்சன் ஆகியோர் பிடித்திருக்கின்றனர்.

இதனால் இந்த நால்வரும் இப்போது சேஃப்டியாக இருக்கின்றனர். கடைசி இரண்டு இடங்களை கூல் சுரேஷ், அனன்யா ஆகியோர் பிடித்திருக்கின்றனர். இதில் தற்போதைய நிலவரப்படி கூல் சுரேஷுக்கு 55,508 ஓட்டுக்கள் கிடைத்திருக்கிறது. அதற்கு அடுத்ததாக அனன்யா 33,309 ஓட்டுகளை பெற்றிருக்கிறார்.

அதனால் இந்த இருவரில் ஒருவர் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதில் கூல் சுரேஷ் ஆர்வத்துடன் பங்கேற்கவில்லை என கடந்த வாரம் ஆண்டவர் கடுமையாக குறிப்பிட்டு இருந்தார். அதனால் அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு துரத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

biggboss vote
biggboss vote

அதேபோல் அனன்யா வீட்டுக்குள் வந்த முதல் வாரத்தில் தெளிவாக பேசி கவனம் ஈர்த்தார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பலரின் ஒரிஜினல் முகங்களை நேரடியாக பார்த்து கொஞ்சம் குழப்ப நிலைக்கு சென்றுவிட்டார். அதனாலயே இப்போது அவருடைய இருப்பு பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. இதனால் இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியேறவும் வாய்ப்புள்ளது.