வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

ரெண்டாக பிரியும் மாயா, பூர்ணிமாவின் Bully கேங்.. இனிமேதான செல்ல குட்டி ஆட்டமே ஆரம்பம்

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் எந்த அளவுக்கு நட்பாக பழகினாலும் இறுதிப்போட்டி நெருங்க நெருங்க பிரச்சனைகள் வந்துவிடும். இதுவரை நடந்த ஏழு சீசன்களில் நட்புக்கு இலக்கணமாக சொல்லப்படும் கவின் மற்றும் சாண்டிக்கு இடையே கூட டிக்கெட் 2 பினாலே டாஸ்க்கில் சண்டை வந்திருக்கிறது. அப்படித்தான் இப்போது மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு இடையே நெருப்பு பற்ற ஆரம்பித்திருக்கிறது.

பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தங்களுடைய சோகமான பக்கத்தை சொல்லும் டாஸ்க், அவர்களுடைய குடும்பத்தினர் பங்கேற்கும் ப்ளீஸ் டாஸ்க் மற்றும் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் அதிக அளவில் எதிர்பார்ப்பை கிளப்பும். அப்படித்தான் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் தற்போது சீசன் 7ல் ஆரம்பித்திருக்கிறது. டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்து ஜோடியாக சகுனி வேலை பார்க்கும் மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு இடையே சலசலப்பு வந்து போய்க்கொண்டு இருக்கிறது.

நேற்றைய ஆட்டத்தின் போது பிக் பாஸ் போட்டியாளர்கள் அத்தனை பேர் மீதும் அதிகமாக கோபப்பட்டார். உங்களுக்கு பிடித்தவர்களுக்காக உங்களுடைய தரத்தை ஏன் விட்டுக் கொடுக்கிறீர்கள், இந்த வீட்டில் எல்லோரும் ரூல்ஸ் பிரேக் பண்ணுகிறீர்கள் என போட்டியாளர்களை கோபத்தில் சாடியிருந்தார். அந்த சமயத்திலேயே மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு இடையே மோதல் ஆரம்பித்து விட்டது.

Also Read:இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறும் குழப்ப கேஸ்.. பரபரப்பாக நடக்கும் ஓட்டிங்

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஜீன்ஸ் ஐஸ்வர்யா ராய் கெட்டப்பில் இருக்கும் மாயா மற்றும் சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா கேரக்டரில் இருக்கும் ரவீனா வந்தேன் வந்தேன் என்ற பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். அந்த நடனத்தை விமர்சித்த பூர்ணிமா, ஏகத்துக்கும் ரவீனாவை பாராட்டுகிறார். இது மாயாவுக்கு சற்று கடுப்பாகி விட்டது போல் தெரிகிறது.

மோதி கொண்ட மாயா, பூர்ணிமா

மாயா மற்றும் பூர்ணிமா இருவருக்குமே இருக்கும் மிகப்பெரிய கெட்ட பழக்கம் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் மற்றவர்கள் பேச வேண்டும் என நினைப்பது. அப்படித்தான் மாயா இப்போது அந்த நடனத்தைப் பற்றி பூர்ணிமா இந்த கருத்தை தான் சொல்லி இருக்க வேண்டும் என எதிர்பார்த்து இருந்திருக்கிறார். தன்னுடைய ஏமாற்றத்தை பூர்ணிமாவிடம் வெறுப்பாக காட்ட, பூர்ணிமாவும் பதில் பேசி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகிறார்.

போட்டியாளர்களில் யார் சண்டை போட்டாலும் அது பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு இடையே சண்டை வந்தால் கண்டிப்பாக இந்த பிக் பாஸ் சீசனில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தால் இதுவரை இரண்டு பேரும் சேர்ந்து பார்த்த சகுனி வேலைகள் பல வெட்ட வெளிச்சம் ஆகும். மாயா, பூர்ணிமாவுடன் இல்லை என்றால் ஈஸியாக பூர்ணிமாவை டார்கெட் செய்துவிடலாம். இருவரில் ஒருவர் எப்போது தனியாக சிக்குவார்கள் என கட்டம் கட்ட காத்திருக்கும் அர்ச்சனாவுக்கு இனி கொண்டாட்டம்தான்.

Also Read:நாட்டாமை தீர்ப்பு அவருக்கே ஆப்பு.. கமலை ஓரங்கட்டி பிக்பாஸை நடத்த 5 பிரபலங்களுக்கு வலை வீசும் விஜய் டிவி

Trending News