புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மரண குத்து குத்திய அர்ச்சனா.. மொத்தமாக சரண்டரான ஹவுஸ் மேட்ஸ்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்களுக்கு ஹீரோ, ஹீரோயின்களின் வெற்றி பெற்ற கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கெட்டப்பில் இருக்கும் போட்டியாளர்கள் அதே போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் விதிமுறை.

அந்த வகையில் அர்ச்சனா திமிரு பட ஈஸ்வரியாகவும், தினேஷ் படையப்பா ரஜினி, விஷ்ணு போக்கிரி விஜய் என ஒவ்வொருவரும் கலக்கல் காஸ்ட்டியூம் போட்டு இருந்தனர். அதில் மாயா ஜீன்ஸ் படத்தில் வரும் ஐஸ்வர்யா ராய் போன்று சோடாபுட்டி கண்ணாடி, பாவாடை தாவணியுடன் காட்சியளித்தார்.

இப்படியாக போட்டியாளர்கள் வீட்டுக்குள் சுற்றிக் கொண்டிருந்த நிலையில் டான்ஸ் போட்டியும் நடைபெற்றது. அதில் ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அதில் மாயா ஆடிய ஆட்டம் தான் விழுந்து விழுந்து சிரிக்கும் படி இருந்தது.

Also read: அந்தர் பல்டி அடித்த அர்ச்சனா.. வாய் அடைத்துப் போன பூர்ணிமா, வயிற்று எரிச்சலில் கத்தும் மாயா

அதேபோன்று அர்ச்சனா ஈஸ்வரி போல் மரண குத்து குத்திய ஆட்டமும் வேற லெவலில் இருந்தது. இந்த பொண்ணுக்கு இப்படி ஒரு எனர்ஜியா என வியக்கும் அளவுக்கு மூச்சை பிடித்துக் கொண்டு அவர் ஆட்டம் போட்டார்.

அடுத்து யார் இதில் சிறப்பாக ஆடினார்கள் என ஹவுஸ் மேட்ஸ் வாக்களிக்க வேண்டும் என பிக்பாஸ் உத்தரவு போட்டார். அதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த பேரும் ஈஸ்வரியாக இறங்கி ஆடிய அர்ச்சனாவுக்கு தான் ஓட்டு போட்டனர்.

அந்த அளவுக்கு அவர் அனைவரின் உள்ளத்தையும் களவாடிவிட்டார். எத்தனை மனஸ்தாபங்கள் இருந்தாலும் இந்த விஷயத்தில் போட்டியாளர்கள் மொத்தமாக அவரிடம் சரணடைந்தது தான் ஆச்சரியம். அந்த வகையில் இந்த டான்ஸ் போர்க்களத்தில் அர்ச்சனா வெற்றி பெற்றது தான் சரி.

Also read: திடுதிப்புன்னு நடந்த பிக்பாஸ் எவிக்சன்.. அர்த்த ராத்திரியில் மூட்டை முடிச்சை கட்டிய போட்டியாளர்

Trending News