Trisha, surya and karthi forgive Ameer’s help : செய்நன்றிக்கு அளவுகோல் இல்லை ஆதலால் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒருவர் செய்த உதவி நினைவில் இல்லாமல் போய் விடுகிறது. ஐந்தறிவு மிருகங்களை விட எக்ஸ்ட்ரா ஒரு அறிவு இருந்து என்ன பயன்? நன்றியை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை ஏன் அவைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தோற்று தான் போகிறார்கள் மனிதர்கள்.
தமிழ் சினிமாவில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் அமீர். அவரின் திறமைகளையும் ஒத்துழைப்பையும் மட்டும் பயன்படுத்திக் கொண்டு காரியம் கைகூடியதும் அவரை கருவேப்பிலை என தூக்கிப் போட்ட பிரபலங்கள் சிலர்.
சூர்யா: ஆரம்ப காலங்களில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பேசப்படாத நிலையில் இவருக்கு திருப்புமுனை கொடுத்தது பாலாவின் நந்தாவும் அமீரின் மௌனம் பேசியதே தான். சூர்யா நந்தாவில் நடிக்கும் போது அதில் உதவி இயக்குனராக பணி புரிந்தது அமிர்தான். அமீரின் வழிகாட்டுதலின் பெயரில் சூர்யா திறமையாக நடித்தார். அப்போது சூர்யாவிற்கு அண்ணனாக தெரிந்த அமீர் இப்போது பருத்திவீரன் இயக்குனராக மட்டுமே தெரிகிறார்.
கார்த்தி: சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்துடன் இருந்த போதும் தமிழ் சினிமாவில் பருத்தி வீரனின் மூலம் பலமான அங்கீகாரத்தை கொடுத்த அமீரை 25வது பட விழாவுக்கு அழைக்காதது, மறந்தது என பலவித துரோகங்களை செய்துள்ளார் கார்த்தி. இதற்குப் பின் தான் விஸ்வரூபம் எடுத்தது பருத்திவீரன் பிரச்சனை.
Also read:வடசென்னை ராஜனாக முதலில் மிரட்ட இருந்த நடிகர்.. 4 வருடத்திற்கு பின் உண்மையை கூறிய அமிர்
திரிஷா: மௌனம் பேசியதே அமீருக்கு மட்டுமல்ல திரிஷாவுக்கும் தமிழ் சினிமாவில் அறிமுகத்தை கொடுத்த முதல் படம். மௌனம் பேசியதே படம் வெளிவந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இருவரும் ரசிகர்களுக்கு தங்கள் நன்றியை காணிக்கையாக்கி உள்ளனர். ரசிகர்களுக்கு நன்றி கூறிய திரிஷா தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி கூற வேண்டும் என்பதை ஏன் மறந்தார். அமீருக்கு நன்றி கூறினால் சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களில் வாய்ப்பு பறிபோகி விடுமோ என்ற அச்சமாக கூட இருக்கலாம் என பலவாறு விமர்சனங்கள் எழுகின்றன.
ஞானவேல்: படைப்பாளரின் உழைப்பை பயன்படுத்தியதோடு திருட்டு பட்டமும் கட்டி கைதேர்ந்தவர் இந்த தயாரிப்பாளர். போலியான வருத்தத்துடன் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இவர் கையாண்ட வருத்தம் என்கிற ஆயுதமோ மிக சிறப்பு. கிளப்பிய பிரச்சன்னையை வருத்ததுடன் முடித்தார் ஞானவேல்.
சரவணன்: பருத்திவீரன் படத்தில் செவ்வாழையாக வந்த சித்தப்பா சரவணனுக்கு பிரேக் கொடுத்த அமீரை, அமீரின் இயக்கத்தில் பருத்திவீரனில் நடித்த எனக்கு சம்பளம் வரவில்லை, சந்தோஷம் வரவில்லை என புலம்பி உள்ளார் சரவணன். தமிழ் சினிமா மறந்திருந்த சரவணனை ரீஎன்ட்ரி கொடுக்க வைத்து அந்த கேரக்டரை பேச வைத்ததற்கு கொடுத்த இந்த நன்றி கடனே சரவணனின் இந்தப் புலம்பல்.
Also read: தியேட்டரில் ரிலீஸ் செஞ்சிருக்கலாம் என ஏங்க வைத்த 5 படங்கள்.. ஓடிடிலையே பெத்த லாபம் பார்த்த சார்பட்டா