5 Tamil Films announced to release in next year: முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்ய இருந்த நிலையில் ரசிகர்களின் ஹைப்பை அதிகரிக்கும் வகையிலும் மற்றும் சில காரணங்களுக்காகவும் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். அவைகளில் சில
விடாமுயற்சி: இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் அஜித்தின் விடாமுயற்சியை ஆக்சன் இல்லாத திரில்லர் என பீடிகை போட்டு வருகிறார். படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆக இருந்த விடாமுயற்சியை. அஜித்தின் பிறந்தநாளான மே 1 வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக் குழுவினர்.
விஜய் 68: நீங்க அஜித் பிறந்தநாளுக்கு ரிலீஸ் பண்ணீங்கன்னா நாங்களும் அதே மாதிரி விஜய் பிறந்தநாளுக்கு விஜய் 68 ஐ ரிலீஸ் பண்ணுவோம் என்று கொடி தூக்கி உள்ளார் வெங்கட் பிரபு. டிஜிட்டல் டிஏஜி கான்செப்ட் உடன் களமிறங்கும் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து தரமான என்டர்டைன் சிம் ஆக ஃபிலிம் ஆக விஜய் 68 ரெடி பண்ணி வருகிறார். கண்டிப்பாக தமிழ் நியூ இயர்க்கு விஜய் மற்றும் அஜித் படங்கள் ரிலீஸ் ஆகப் போவது இல்லை.
Also Read: 1000 கோடி வசூலை எதிர்பார்த்து வெளிவர உள்ள பிரம்மாண்டமான 6 படங்கள.. கங்குவாவை மிஞ்சுமா காந்தாரா!
கங்குவா: இந்திய சினிமா ஆவலுடன் தமிழ் புத்தாண்டுக்கு எதிர்பார்த்த கங்குவா திட்டமிட்டபடி ஏப்ரலில் ரிலீஸ் ஆகாமல் செப்டம்பர் வரை ஒத்தி வைத்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பல மொழிகளிலும் தயாராகி வரும் கங்குவா படப்பிடிப்பில் சிறு சிறு விபத்து ஏற்பட்டதை அடுத்து தற்போது முழு வீச்சில் படத்தை தயார் செய்து வருகின்றனர்.
தங்கலான்: பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகன்,பசுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் தங்கலான், கேஜிஎப் மாதிரி கோலால் தங்க வயலில் வேலை பார்த்த ஆதி தமிழர்களின் கதையை தழுவிய படமாகும். படப்பிடிப்பு முடிந்த நிலையில் பா ரஞ்சித்திற்கு சில காட்சிகள் திருப்தியாக இல்லாததால் ரீசூட் நடக்கிறது. ஜனவரி 26 ரிலீஸ் தேதியாக அறிவித்த பா ரஞ்சித் தற்போது ரீ சூட்டின் வேலைகள் காரணமாக ரிலீஸ்சை ஏப்ரலுக்கு தள்ளி வைத்து சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் கூட போட்டியிட தயாராகி வருகிறார்.
இந்தியன் 2: ஊழலுக்கு எதிராக தமிழ் புத்தாண்டில் களம் இறங்க இருந்த இந்தியன் தாத்தா ரிலீஸ்சை மேலும் தாமதப்படுத்தி உள்ளார். பிரம்மாண்ட இயக்குனரின் படைப்பில் அனிருதீன் இசையில் சுபாஷ்கரண் தயாரிப்பில் கமல்,சித்தார்த்,எஸ் ஜே சூர்யா காஜல் அகர்வால் பிரியா பவானி சங்கர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்தியன் 2 அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என தகவல்கள் வந்துள்ளது.
Also Read: பான் இந்தியா மூவியாக உருவாகும் 2 படங்கள்…டோலிவுட்டின் பிடியில் அஜித்