ஆசை அறுவது மோகம் 30 என பிரிந்த 5 ஜோடிகள்.. லிவிங் டுகெதர் வாழ்க்கையை வெறுத்துப் போன நடிகைகள்

Kollywood celebrities love story and break ups: தலைவனும் தலைவியும் உணர்வு பூர்வமாக ஒன்றிணைந்து, கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்காமல் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது என்பது இயலாத கதையாக உள்ளது.

“ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதல்னு சொல்றாங்க அனைவரும்” இதை மெய்ப்பிக்கும் விதமாக எதற்கும் பொறுமை இல்லாமல் அவசர அவசரமாக  உணர்வு பூர்வமான விஷயங்களையும் கையாளும் மனிதர்கள் காதல், திருமணம், பிரிவு, புலம்பல், திரும்பவும் காதல் என சூழலில் சிக்கிக் கொண்டு உள்ளனர். பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

பப்லு-ஷீத்தல்: பொருந்தா காதலுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த இந்த ஜோடி சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவிடுதல், ரீல்ஸ் என  இளைஞர்களை குறிப்பாக சிங்கிள்களை வெறுப்பேத்தி வந்தனர். திடீரென இவர்கள் இணைந்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்ததன் மூலம் இவர்களது பிரிவை உறுதி செய்தனர். மேலும் பப்லு நான் முட்டாளாக இருந்து விட்டேன், ஏமாந்து விட்டேன் என்று புலம்பித் தவித்து வருகிறார்.

கவின்-லாஸ்லியா: பிக் பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டதன் மூலம் தங்கள் காதலை உலகறிய செய்தவர்கள் இந்த ஜோடிகள். பிக் பாஸ் சீசனில் இருந்த வலுவான பிணைப்பு வெளியேவந்தவுடன் எங்களுக்குள் இல்லை என்று வெளிப்படையாக கூறி காதலை முடித்துக் கொண்டதோடு, கவின் மோனிகா என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம்  செய்தார்.

ஆர் கே சுரேஷ்-திவ்யா: தாரை தப்பட்டையின் மூலம் கொடூர வில்லனாக அறிமுகமான ஆர்கே சுரேஷ், சின்னத்திரை நடிகை திவ்யாவை வெகு நாட்களாக காதலித்து வந்தார். திருமணம் நிச்சயமான நிலையில் ஜாதகத்தில் கட்டம் சரியில்லை என்று நிறுத்தி வைக்கப்பட்ட கல்யாணம் இறுதியில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வருகிறது திருமணத்திற்கு முன்பே பிரிவது நல்லது என்று திவ்யா தரப்பில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது முடிவாக மது என்கிற பைனான்சியரை கல்யாணம் செய்தார் சுரேஷ்.

ஜெய்-அஞ்சலி: எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற திரைப்படங்களில் சேர்ந்து நடித்தது இந்த ஜோடி. திரைத் துறையில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டது இவர்களின் காதல் கதை.  இருவரின் காதலால் பட வாய்ப்புகள் குறைவதை அறிந்த அஞ்சலி திடீரென பேட்டி ஒன்றில் நான் எப்போது காதலிப்பதாக சொன்னேன் என்று  குண்டை தூக்கி போட்டார்.

கமல்-பூஜா குமார்: பூஜா குமார் 2000 ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவேயில் அறிமுகம் கொடுத்த இந்த ரோஜா கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். கமலஹாசனின் குடும்ப விழாவில் வெளிய ஆட்களுக்கு இடம் கொடாத வகையில் பூஜா குமாரை மட்டும் அழைத்திருந்தார்களாம். உறுதிப்படுத்தப்படாத இந்த ஜோடியின் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கமலஹாசன் எங்களது குடும்ப நண்பர் அதற்காக மட்டுமே விழாவில் பங்கு கொண்டேன் என்றார் பூஜா குமார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →