2023 Remake movies in tamil: தமிழைத் தவிர மற்ற மொழியில் எடுக்கும் படங்கள் வியாபார நோக்கில் வெற்றி அடையும் பொருட்டு மற்றும் அதில் உள்ள கருத்துக்கள் ரசிகர்களை கவரும் வண்ணம் இருப்பதால் அந்த மாதிரியான படங்களை தமிழில் ரீமேக் செய்து வெற்றி பெற நினைக்கின்றனர் இயக்குனர்கள். ஆனால் காலத்தின் கொடுமையோ என்னவோ சில படங்கள் அந்தந்த கலாச்சாரத்திற்கு தகுந்தபடி மாறுபட்டு தமிழில் வெற்றி பெறாமல் போய்விடுகிறது அப்படியான படங்கள் சில.
பத்து தல: கன்னடத்தில் 2017 வெளியான மஃப்டி என்ற படத்தை தழுவி சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல, புதுமையான எந்த ஒரு சுவாரசியங்களும் அற்ற நிலையில் மண்ணை கவியது. அரசியலில் எந்த கட்சி ஆள வேண்டும் என்பதை ஒரு மாஃபியா கும்பல் முடிவு பண்ணுவது போன்ற சில லாஜிக்குகள் மிஸ் ஆகி ரசிகர்களை கேள்வி கேட்க வைத்துவிட்டது இந்த பத்து தல.
தி கிரேட் இந்தியன் கிச்சன்: 2021 மலையாளத்தில் வெளிவந்த தி கிரேட் இந்தியன் கிச்சன் என்பதை அப்படியே தமிழில் ரீமேக் செய்து இருந்தனர். மலையாளத்தில் வெற்றி நடை போட்ட இப்படம் தமிழில் சாதாரணமாக வந்து போனது. மலையாளத்தில் வந்த அளவு நாயகி மீது பரிதாபமும் நாயகன் மீதும் கோபமும் கொஞ்சம் குறைந்தது எனலாம்.
லவ்: 2020 வெளியான மலையாள படத்தின் ரீமேக் இந்த லவ் இல் பரத் மற்றும் வாணி போஜன் நடித்திருந்தனர். இது பரத்தின் 50 ஆவது படமாகும். காதல், துரோகம் திருமணத்திற்கு புறம்பான உறவினால் உண்டாகும் ஆபத்து என ஒரு வட்டத்தில் சுற்ற வைத்து விடுகிறது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் என்று ரசிகர்களை அலைக்கழிக்க வைத்துவிட்டது இந்த லவ்.
Also read: ஆண்டவருக்கே அல்வா கொடுக்க நினைத்த சிம்பு.. விட்டு பிடிக்கும் உலக நாயகன்
கொன்றால் பாவம்: 2018 கன்னடத்தில் வெளியான “ஆ காரல ராத்திரி” என்ற படத்தின் ரீமேக் தமிழில் “கொன்றால் பாவம்” என்ற பெயரில் வெளியானது. வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி நடித்துள்ள இப்படத்தில் கிராமத்து கதையை திணிக்க முயற்சித்து உள்ளனர். ஆசையை தூண்டி பாவத்தை செய்யும் செயல்கள் நியாயப்படுத்தப்படாமல் குறைவான கதையை ஜவ்வாக இழுத்து ரசிகர்களை சலிப்படைய வைத்தனர்.
ரைடு: 2018 வெளியான கன்னட படமான “டகரு” வின் ரீமேக் தான் அறிமுக இயக்குனர் கார்த்தியின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த திரைப்படம் ரைடு ரவுடிகளிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றும் காவல்துறை அதிகாரியாக பழைய மசாலாவை புதிய பாத்திரத்தில் பரிமாறி உள்ளார். விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக பஞ்ச் வசனங்கள் பேசி ரசிகர்களை பந்தாடி விட்டார். காதலியை கொன்றவனை பழிவாங்க சென்று விட்டு காதலி தங்கையை மீட்பது தான் கதை.
கிக்: 2016 வெளிவந்த கன்னட படமான ஜூம் என்பதன் ரீமேக்கே “கிக்” ஆகும். டிடிரிட்டன்சுக்கு பின் கிக்கை எதிர்பார்த்த சந்தானம் ரசிகர்களுக்கு பெருத்த தலைவலியானது இந்த கிக். காமெடியை எதிர்பார்த்து போனவர்கள் வலுக்கட்டாயமாக சிரிக்க முற்பட்டு இருந்தனர். பேசிப்பேசியே ரசிகர்களை கொன்று கூறுபோட்டிருந்தார்கள் .இந்த படத்தில் கண்டுபிடித்த எனர்ஜி மருந்தை ரசிகர்களுக்கே கொடுத்த அனுப்பி இருக்கலாம் என்ற அளவு இருந்தது இந்த கிக்.
Also read: சினிமா இல்லாட்டாலும் நான் பொழச்சுப்பேன்.. ஆர்யாவின் காஸ்ட்லி பிசினஸ் என்ன தெரியுமா.?