திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத 5 மரணங்கள்.. அரசியலை தாண்டி ஒரு கெட்ட பெயர் கூட வாங்காமல் மறைந்த கேப்டன்

Vijayakanth: நம் வீடுகளில் ஒருவர் உயிரிழந்து விட்டால் கதறி அழுவது என்பது சகஜமான விஷயம். ஆனால் ஒருவரின் மறைவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீடும் கதறி அழுதால் அந்த மனிதன் ஒரு சகாப்தமாக தான் இருந்திருக்க வேண்டும். அப்படி ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையே கதறி அழ வைத்த ஐந்து பேரை பற்றி பார்க்கலாம்.

ஏற்றுக்கொள்ள முடியாத 5 மரணங்கள்

காமராஜர்: பெருந்தலைவர் காமராசர் இறந்து 40 ஆண்டுகள் மேலாகியும் இன்றுவரை நல்ல அரசியல்வாதிக்கு எடுத்துக்காட்டாக அவர் மட்டுமே சொல்லப்படுகிறார். காமராஜரால் தான் தமிழக பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏழு சதவீதம் இருந்த மாணவர்களின் வருகை இதன் பின்னரும் 37 சதவீதம் அதிகரித்தது. நிறைய நலத்திட்டங்களை காமராசர் தமிழகத்திற்கு செய்திருக்கிறார். 1975 ஆம் ஆண்டு நடந்த அவருடைய மரணம் தமிழகத்திற்கு பேரிழப்பாக அமைந்தது.

அப்துல் கலாம்: படிப்பு மட்டுமே ஒருவரை உலக அரங்கில் உயர்த்தும் என்பதற்கு முக்கிய உதாரணம் அப்துல் கலாம். தென் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், உலக அரங்கில் போற்றப்படும் விஞ்ஞானியாக இருந்தார். இன்று உலக நாடுகள் இந்தியா மீது போர் தொடுக்க பயப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அப்துல் கலாமின் பொக்ரான் அணுகுண்டு சோதனை தான். 27 ஜூலை 2015 ஆம் ஆண்டு தமிழக மக்களை துயரில் ஆழ்த்தி உயிரிழந்தார்.

Also Read:அரசியலைத் தாண்டி, சினிமாக்காரர்களுக்கு விஜயகாந்த் செய்த உதவி.. கேப்டன் இல்லனா, இப்ப இந்த ஹீரோக்களே இல்ல

சிவாஜி: நடிப்புக்கு அகராதியாக இருப்பவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடைய நடிப்புத் திறமைக்காக இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளும் இவரை கௌரவித்து இருக்கிறது. தன்னுடைய கடைசி காலங்களில் சினிமாவில் இருந்து ஒதுங்கிக் கொண்ட சிவாஜி இறந்து 23 ஆண்டுகள் ஆகிறது. இன்றுவரை இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கு பெரிய வலி தான்.

மனோரமா: ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் திறமை மட்டுமே இருந்தால் ஒரு பெண்ணால் எப்படிப்பட்ட வெற்றியும் பார்க்க முடியும் என காட்டியவர் தான் ஆச்சி மனோரமா. தமிழ் சினிமாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த இந்த நடிகை இறந்தது சினிமாவுக்கு மட்டுமல்லாமல், தமிழக மக்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத மரணம். இன்று வரை இவருடைய இடத்தை எந்த ஒரு நடிகையாலும் நிரப்ப முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

விஜயகாந்த்: சினிமாவில் நல்ல ஒரு நடிகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு அரசியலுக்கு வந்த கேப்டனை தமிழக மக்கள் சிவப்பு கம்பளம் வீசி வரவேற்றனர். ஒரு கட்டத்தில் அவருடைய உடல்நிலை தொய்வு அடைந்தபோது, நீங்கள் எங்களை ஆளாவிட்டாலும் பரவாயில்லை ஆயுசோடு இருங்கள் என கோயில் கோயிலாக தமிழக மக்கள் வேண்டினார்கள். ஆனால் மக்களின் வேண்டுதலையும் தாண்டி, கேப்டன் இறைவனடி சேர்ந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத பெரிய துயரம்.

Also Read:சம்பளத்திற்கு கூட இவ்வளவு மட்டமா நடிக்க மாட்டேன்.. விஜயகாந்த் நடிக்க முடியாதுன்னு சொன்ன 5 கதாபாத்திரங்கள்

Trending News