ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நான் பஞ்சவர்ணக்கிளியினு டாட்டா போட்ட த்ரிஷா.. விஜய்க்கு எல்லாம் இனிமேல் அல்வா தான்

Trisha: 40 வயசிலும் இவ்வளவு அழகா என்று சொல்லும் அளவிற்கு மொத்த அழகையும் சேர்த்து வைத்து கண்ணுக்கு குளிர்ச்சியாக செகண்ட் இன்னிங்ஸில் கலக்கி கொண்டு வருகிறார் திரிஷா. அதிலும் முன்பு விட தற்போது பேரழகியாக மாறிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு த்ரிஷாவின் முகம் அவ்வளவு பளபளப்பாக ஜொலிக்கிறது.

அந்த வகையில் த்ரிஷா வந்திருக்கு பிறகு மற்ற நடிகை எல்லாம் ஓரங்கட்டி விட்டாச்சு என்று சொல்லும் அளவிற்கு முன்னணி நடிகர்கள் அனைவரது பார்வையும் த்ரிஷாவின் மீதுதான் திரும்பி இருக்கிறது. அதனால் தான் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

அடுத்ததாக மலையாளத்தில் ராம் மற்றும் ஐடெண்டி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி தற்போது பிஸியாகி நடித்து வருவதால் த்ரிஷாவின் மவுசு கூடிவிட்டது. அதனால் தான் என்னமோ நயன்தாரா படம் தமிழில் எடுபடாமல் போய்விட்டது. இந்த காரணத்திற்காகவே நயன்தாரா பாலிவுட்டில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார்.

Also read: 2023-இல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்.. மார்க்கெட் இல்லனாலும் திரிஷாவை ஓரம் தள்ளிய நயன்

தற்போது இதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக பாலிவுட்டில் த்ரிஷா நடிக்கப் போயிருக்கிறார். அதாவது இயக்குனர் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் ஒரு படம் எடுக்கிறார். அந்த படத்தில் சல்மான் கான் தான் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார். அதனால் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதற்காகத்தான் போயிருக்கிறார்.

அந்த வகையில் இவர்களுடைய காம்பினேஷனில் வரக்கூடிய படம் கண்டிப்பாக த்ரிஷாவிற்கு அங்கேயும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இதனால் நயன்தாராவின் பாலிவுட் கனவு சிதறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தமிழில் த்ரிஷாவுக்கு பொருத்தமான ஜோடி விஜய், இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரொம்பவே பக்காவாக இருக்கிறது என்று ரசிகர்கள் விரும்பி பார்த்தார்கள்.

இதனால் அடுத்து விஜய் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக த்ரிஷா இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்த நிலையில் அனைவருக்கும் டாட்டா காட்டிவிட்டு அக்கட தேசத்திற்கு பறந்து போய்விட்டார். அதுமட்டுமில்லாமல் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்த பிறகுதான் அனைவரது பார்வையும் இவர் மீது திரும்பியது. அப்படிப்பட்ட விஜய்க்கே அல்வா கொடுத்து சல்மான் கானுக்கு ஜோடியாக போய்விட்டார்.

Also read: நன்றியே இல்லாமல் அமீரை அசிங்கப்படுத்திய திரிஷா.. சூர்யாவுடன் நடிப்பதற்காக பச்சோந்தியாக மாறிய குந்தவை

Trending News