செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கேப்டனை அடுத்து கலைஞரை அவமதிக்கும் 6 நடிகர்கள்.. வெளிநாட்டிலேயே டேரா போட்ட விஷால்

After the captain, 6 actors who insult the kalaingar: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே மாதிரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்ற பொழுது கலைஞர் 100வது விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலையும் வாங்கி விட்டதாக கூறியிருந்தார்கள்.

அதற்கான வேலைகள் அனைத்தும் கூடிய விரைவில் நடைபெறும் என்று சொல்லிய நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பினால் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் முதல்வர் அவர்களும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழுமூச்சாக இறங்கி உதவி செய்து வருவதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்திலேயே கலைஞருக்கான நூறாவது விழாவை சிறப்பித்து விட வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் இருந்து முடிவெடுத்து இருக்கிறார்கள். அதனால் வருகிற சனிக்கிழமை ஆறாம் தேதி மாலை நடைபெறும் என்று அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு வேலைகளும் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Also read: விஜயகாந்த் மரணத்தில் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கை.. கண்டுக்காத நன்றி கெட்ட நடிகர் சங்கம்

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் அனைத்து நடிகர்களுமே கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தின் சார்பாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஆனால் சில நடிகர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது என்று ஒவ்வொரு காரணத்தை கூறி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் விஷால் தற்போது நியூயார்க்கில் இருப்பதால் அவரால் வர முடியாது என்று அங்கேயே டேரா போட்டு விட்டார்.

அதே மாதிரி கார்த்தி ஆஸ்திரேலியாவிலும், நாசர் எங்கே இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு நடிகர் சங்கத்தின் முக்கியமான புள்ளிகள் இருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து அதர்வா, கௌதம் கார்த்திக் மற்றும் வைபவ் ஆரம்பத்தில் வருகிறோம் என்று சொல்லிவிட்டு தற்போது ரொம்ப பிசியா இருக்கிறோம் வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

இப்படி இவர்கள் ஒவ்வொரு காரணத்தை சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார்கள். இதற்கு அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியில் அஜித், விஜய் வருவாங்களா என்பதும் சந்தேகமாக தான் இருக்கிறது. இப்படி ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்லி கலைஞர் நூறாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்கள். ஏற்கனவே விஜயகாந்த் இறுதி மரியாதையை செலுத்த தவறி விட்டார்கள். மறைந்த தலைவர் கலைஞரையும் தற்போது அவமதிக்கும் விதமாக இருக்கிறது.

Also read: விஜய்- விஜயகாந்த் உறவு விரிசலின் பின்னணி காரணம்.. பிரேமலதா போட்ட அரசியல் ஸ்கெட்ச்

Trending News