வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஏக்கர் கணக்கில் பொய் சொல்லிய 3 சினிமா பிரபலங்களின் உருட்டு.. விஷாலை அடிச்சுக்க ஆளே இல்லையாம்!

Tamil cinematographers who have forgot their Promises : அரசியல்ல இது சாதாரணமப்பா என்கிற மாதிரி வாக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பொருட்டு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு வெற்றி பெற்ற பின் வாக்காளர்களை மறந்து விடுவது சாதாரணமான ஒன்று. அதேபோன்று சினிமாவிலும், படத்தின் ப்ரோமோஷனின் போதும் உணர்ச்சிகரமான சம்பவங்களின் நிகழ்வுகளின் போதும் எமோஷனலாக பேசும் சினிமாக்காரர்கள் நடைமுறைப்படுத்தாமல், “பேச்சு பேச்சோடு இருக்கணும்!” என்று  வாக்குறுதிகளை டீலில் விட்டு விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு சென்னை ஒன்றிய  அரசு அலுவலகத்திற்கு முன் வீர தமிழன் முத்துக்குமார் தீக்குளித்து இறந்தார்.  ஈழத் தமிழரின் வாழ்வுரிமையை காப்பாற்றுவதற்காக உயிர் துறந்த முத்துக்குமாரின் பெயர் எல்லா படங்களிலும் போடப்படும்னு சொல்லி இரண்டு படங்களில் மட்டுமே போட்டுவிட்டு மறந்து போனார்கள் தமிழ் சினிமா துறையினர்.

தமிழ் ஈழத்திற்காகவும் மேலும் சிறையில் வாடும் மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி போராட்டம் செய்த செங்கொடி இறந்த போதும் இதையே சொன்னார்கள். இன்று வரை எதையுமே செய்யவில்லை.

Also read: சினிமாவை கேவலப்படுத்த யூடியூப் மூலம் என்ட்ரிகொடுத்த 5 பேர்கள்.. பச்சை பச்சையாக பேசும் ஜிபி முத்து

கந்தசாமி படத்தில் கூறியது போன்று கஷ்டப்படும் கிராமத்தை தத்தெடுத்து வசதிகளை மேம்படுத்துவோம் என்று சூளுரைத்தார்கள்.  தமிழ்நாட்டில் அப்படியான கிராமங்கள் அதிகமாக இருப்பதால், எந்த கிராமத்தை தத்தெடுப்பது என்ற குழப்பத்தில் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டனர்.

திறமையுள்ள இளம் கலைஞர்கள் வறுமையுடன் கஷ்டப்படுவதை பார்த்து மனம் இறங்கிய சினிமாக்காரர்கள் தகுதி உள்ளவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு அளிப்போம் என்று கமல் உள்பட பல நடிகர்கள் கூறியதோடு சரி. இங்கே தான் நெப்போடீஸம் தலைவிரித்து ஆடுகிறதே. இருக்கிற நடிகர்களையே காலி செய்ய நினைக்கும் போது புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

அதையெல்லாம் விட்டுவிடலாம் இப்போ விஷால் நடிகர் சங்கத்தில் ஆரம்பித்து  தாராள மனதுடன் நிறைய வாக்குறுதிகளை கூறிக் கொண்டு வருகிறார். உதாரணமாக  மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன்களுக்கு ஹெல்ப் பண்ணுகிறேன் என்று சொன்னது மற்றும் அவர்களின் படங்களில் கெஸ்ட் அப்பியரன்ஸ் பண்ணுவது என பலவற்றை கூறியுள்ளார். நினைவில் வைத்துக் கொண்டால் சரிதான்.

Also read: தமிழ் சினிமாவில் ஹீரோவை மிஞ்சிய ஸ்மார்ட் வில்லன்கள்.. 90களில் அழகில் மிரட்டிய விஜயகாந்த்தின் உயிர் நண்பன்

Trending News