செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அயலான் சலார் போன்ற படங்களால் ஹீரோகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு.. உஷாரான தயாரிப்பாளர்கள்

Ayalaan and Salaar: தற்போதைய படங்கள் அனைத்தும் பட்ஜெட்டை அதிகமாக வைத்து மிகப் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார்கள். அதற்கு காரணம் அந்த படத்தின் மீது உள்ள கதையும் தாண்டி ஹீரோ மீது வைக்கப்பட்ட நம்பிக்கை. அவர்களால் கண்டிப்பாக படம் ஹிட் அடித்து விடும் என்பதினால். ஆனால் தற்போது மக்கள் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள்.

யார் ஹீரோவாக இருந்தாலும் சரி, படம் பிரம்மாண்டமாக இருந்தாலும் சரி கதை நன்றாக அமைந்து அவர்களுக்கு ஒரு என்டர்டைன்மெண்டாக இருந்தால் மட்டுமே அந்தப் படத்தை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.  அது சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி. அதனால் தற்போது தயாரிப்பாளர்கள் அனைவரும் உஷாராகி விட்டார்கள்.

இனியும் அதிகமான பணத்தை எந்த ஹீரோ மீது நம்பிக்கை வைத்து வாரி இறைக்க வேண்டாம். கதைக்கு தகுந்தார் போல் ஒரு குறிப்பிட்ட பணத்தை செலவழித்தால் போதும், அதே மாதிரி அந்த படத்திற்கு நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.

Also read: மசாஜ் சென்டரால் சிக்கிய சிவகார்த்திகேயன்.. அந்த மாதிரி தொழிலா.? பயில்வான் கிளப்பிய சர்ச்சை

இதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் படமும், பாகுபலி பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சலார் படத்தையும் சொல்லலாம். இப்படம் இயக்குனர் பிரசாந்தில் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்தது. கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டது.

ஆனால் படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் இவருடைய சம்பளமாக 100 கோடி வாங்கியுள்ளார். ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு படம் போகவில்லை என்பதால் தயாரிப்பாளருக்கு ஏமாற்றமாக அமைந்துவிட்டது. அதே மாதிரி இப்போதைக்கு ஓடிடி தளங்களும் படங்களை பெரும் தொகையை கொடுத்து வாங்க முன் வருவதில்லை.

அதே மாதிரி அயலான் படமும் அதிக அளவில் தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டது. ஆனாலும் தற்போது வரை 90 கோடி வசூலை மட்டும் பெற்றிருக்கிறது. இதனால் தற்போது தயாரிப்பாளர்கள் இனியும் ஹீரோகளுக்கு அதிகமான சம்பளத்தை கொடுக்க தேவையில்லை என்று முடிவு பண்ணி அவர்களுக்கு மிகப்பெரிய ஆப்பை வைத்து விட்டார்கள். இதனால் மற்ற ஹீரோகளுக்கும் மிகப்பெரிய பாதிப்பாக அமைந்துவிட்டது.

Also read: தில் ராஜுவால் ஏற்பட்ட பெரிய தலைவலி.. தேவையில்லாத பஞ்சாயத்தில் சிக்கிய தனுஷ், சிவகார்த்திகேயன்

Trending News