வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எங்க அப்பா சங்கியா!. லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் அதிரடி பேச்சு

Lal Salaam Audio Launch: நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம் தான் லால் சலாம். இந்த படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் பிப்ரவரி ஒன்பதாம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. விரைவில் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், நேற்று சென்னையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவின் இரண்டு மகன்கள், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் என பலரும் கலந்து கொண்டார்கள்.

3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பொதுவாக மேடைகளில் அவ்வளவாக பேசியது இல்லை. ஆனால் இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய சில விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது. தனுஷ் உடனான விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசி இருக்கும் முதல் பொது மேடை என்று கூட இதை சொல்லலாம். இதில் ஐஸ்வர்யா தன்னுடைய அப்பா ரஜினிகாந்த் பற்றி பேசியிருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா ரசிகர்களால் தலையை தூக்கி கொண்டாடப்பட்டாலும் அதே நேரத்தில் அவர் சந்திக்கும் நெகட்டிவ் விமர்சனங்களும் அதிகம். அவர் இமயமலைக்கு போவதில் இருந்து, ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது முதற்கொண்டு அரசியல் ரீதியாக அவர் மீது நெகட்டிவ் விமர்சனம் எழுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதைப் பற்றித்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

Also Read:வேட்டையனுக்குப் பின் ரஜினி வைக்கும் பொறி.. கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்

எங்க அப்பா சங்கியா!.

சமூக வலைத்தளங்களில் அப்பாவை ஒரு சிலர் அடிக்கடி சங்கி என குறிப்பிடுவது உண்டு. அரசியல் கட்சி சார்ந்தவர்களை இப்படி சங்கி என சொல்லலாம். ஆனால் அப்பாவை இப்படி குறிப்பிடுவது சரியான விஷயம் கிடையாது. என் அப்பா சங்கி கிடையாது, அப்படி அவர் சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் நடித்திருக்க முடியாது, மனிதநேயமிக்க ஒருவரால் தான் இந்தப் படத்தில் நடிக்க முடியும்.

லால் சலாம் படத்தின் கதையை ரீல் ஷோவாக பார்க்கும் போதே அப்பாவே என்னிடம் வந்து இந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன் என சொன்னார். ஒரு அப்பாவால் தன் மகளுக்கு பணத்தை கொடுக்க முடியும், என் அப்பா எனக்கு பணத்தையும் கொடுத்து இருக்கிறார், வாழ்க்கையையும் கொடுத்து இருக்கிறார். நீங்கள் இந்துவாக இருக்கலாம், கிறிஸ்டியனாக இருக்கலாம், ஆனால் இந்த படத்தை ரஜினியின் ரசிகராக மட்டுமே பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது நீண்ட வருடங்களாகவே குறிப்பிட்ட இந்த சாயம் பூசப்பட்டு கொண்டிருந்தது. இது போன்ற ஒரு விமர்சனத்திற்கு அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சரியான ஒரு மேடையை தேர்ந்தெடுத்து பதிலளித்து இருப்பது ரொம்பவே பாராட்டுதலுக்குரிய விஷயம். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடித்திருக்கும் இந்த லால் சலாம் படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கபில்தேவ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:ரஜினி ஹீரோயிசம் காட்டாத 6 படங்கள்.. நூறாவது படத்தில் தோற்றுப் போன தலைவர்

Trending News