சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

1000 எபிசோடுகளை கடந்து முடிவுக்கு வரப் போகும் சன் டிவி நாடகம்.. புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஜீ தமிழ் ஹீரோ

Sun tv New Serial: எத்தனையோ சேனல்கள் போட்டி போட்டு புது புது நாடகங்களை கொண்டு வந்தாலும் சன் டிவிக்கு ஈடாகாது என்பதற்கு ஏற்ற மாதிரி மக்கள் அனைவரும் சன் டிவி நாடகத்துக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் டிஆர்பி யின் முதல் ஐந்து இடத்தை பிடித்து சிம்ம சொப்பனமாக ஜொலிக்கிறது.

அத்துடன் சன் டிவியில் வரும் நாடகங்கள் பெண்களை கவரும் வகையில் கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளும் அமைகிறது. அந்த வகையில் காலை முதல் இரவு வரை நாடகத்துக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு பெண்களை மையமாக வைத்து தான் அதிகமாக இருக்கிறது.

அதில் ஒரு நாடகம் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக முடிவு நிலைக்கு வந்து விட்டது. அதாவது இரவு 9.30 மணிக்கு அன்பே வா சீரியல் மக்களின் ஃபேவரிட் நாடகமாக இருந்தது. இதில் பூமிகா கேரக்டரில் நடித்த டெல்னா டேவிஸ் இறந்து போகிற மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு நடிகையை கொண்டு கதை நகர்ந்து வருகிறது.

Also read: தர்ஷினியை காப்பாற்ற களத்தில் இறங்கும் ஜீவானந்தம்.. முதல் அடி ராமசாமி, கிருஷ்ணசாமிக்கு தான்

தற்போது இந்த நாடகம் கூடிய சீக்கிரத்தில் முடிவுக்கு வரப்போகிறது. புதிதாக இன்னொரு நாடகத்தை கொண்டு வரப் போகிறார்கள். அதாவது ஜீ தமிழ் சேனலில் பிரியாத வரம் வேண்டும் மற்றும் பேரன்பு போன்ற தொடர்களில் நடித்த விஜய் வெங்கடேசன் தற்போது சன் டிவியில் மல்லி என்ற நாடகம் மூலம் எண்டரி கொடுக்கப் போகிறார்.

இவருடைய அழகுக்கும் நடிப்புக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்காகவே நாடகத்தை பார்த்து வந்தார்கள். அந்த வகையில் இவரை வைத்து சன் டிவி புது நாடகத்தை ஆரம்பிக்க போவதால் இன்னும் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும். இவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் சூரிய வம்சம் சீரியலில் நடித்த நிகிதா ராஜேஷ் கமிட் ஆகியிருக்கிறார். இந்த நாடகத்தை சரிகம நிறுவனம் தயாரிக்கப் போகிறது. இதற்கான அப்டேட் கூடிய விரைவில் சேனலில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடுவார்கள்.

peranbu serial actor
peranbu serial actor

Also read: கிடைக்கிற கேப்பில் ஆட்டைய போட நினைக்கும் விஜயா.. முத்துவிடம் வசமாக சிக்க போகும் ரோகிணி

Trending News