Anirudh Own Business: இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய 21 வது வயதில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து தற்போது இருக்கும் பல முன்னணி இசையமைப்பாளர்களுக்கு வேலையே இல்லாமல் ஆக்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இளம் ஹீரோக்கள் மட்டுமில்லாமல் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களும் இப்போதைக்கு அனிருத் கைவசம் தான். சொல்லப்போனால் அனிருத் இல்லாத முன்னணி ஹீரோக்களின் படங்களே இல்லை என்று சொல்லலாம்.
அனிருத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய மைத்துனர் ரவிச்சந்திரன் மகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த உறவுமுறை மூலம் தான் அவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. என்னதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தற்போது அனிருத் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி இருப்பது அவருடைய கடின உழைப்பால் தான். முதல் படமான 3 திரைப்படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலைவெறி டி மூலம் ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
அனிருத் தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானை விட இவருக்கு சம்பளம் அதிகம். திரைப்படத்திற்கு இசையமைப்பது மட்டுமில்லாமல் நிறைய இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே 50 முதல் 60 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் அனிருத் தன்னுடைய தொழில் முதலீட்டையும் தொடங்கி இருக்கிறார்.
Also Read:பல நூறு கோடி சம்பளம், அனிருத்தின் அடுத்தடுத்த வெளிவர உள்ள 13 படங்கள்.. 2024-25 கிங் மேக்கர் நான்தான்
சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட தொழில்
அனிருத் கடந்த 2018 ஆம் ஆண்டு சம்மர் ஹவுஸ் ஈட்டறி என்னும் உணவகத்தை தன் நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கி இருக்கிறார். இந்த ஹோட்டல் ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கிறது. மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஹோட்டல் பணம் படைத்தவர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டிருப்பது அதன் கட்டமைப்பு மற்றும் உணவுகளின் விலைகளை பார்க்கும் பொழுதே நன்றாக தெரிகிறது.
இந்த இடத்தில் ஒரு சாதாரண காபியின் விலை மட்டுமே 30 ரூபாய். வெஜிடபிள் சூப் முதல் நான் வெஜ் சூப்பரை ஆரம்ப விலையே 200 ரூபாய் தான். சிக்கன் மற்றும் மீன் வெரைட்டிகள் ஆரம்பிப்பது நானூறு ரூபாயில் இருந்து தான். ஒரு கிரீன் டீ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று லெமன் டீ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாஸ்தா மற்றும் கேக் விலைகளும் 300 ரூபாய்க்கு மேல் தான் இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அனிருத் இந்த ஹோட்டலின் மூலம் லட்சத்தில் லாபம் பார்க்கிறார்.
கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கும் மேலாக இந்த ஹோட்டல் பிசினஸ் அனிருத்துக்கு கை கொடுத்து வருகிறது. கோடி கோடியாக சம்பாதிக்கும் அனிருத் அந்த காசை எல்லாம் என்ன பண்ணுகிறார் என்று பார்த்தால் பொறுப்பாக தொழில் தொடங்கி லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார். காசை பல மடங்கு ஆக்குவதில் இவர் நயன்தாராவை முந்திவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
Also Read:லோகேஷ், அனிருத்துக்கு வலை விரிக்கும் நடிகர்.. தும்பை விட்டு வாலை பிடிக்கும் சாக்லேட் பாய்