Thug life movie Director Mani Ratnam net worth: சுருக்கமான வசனங்களால் பார்வையாளர்களின் நெஞ்சத்தில் நிறைவான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் மணிரத்தினம் அவர்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமே. உதவி இயக்குனராக அல்லாமல் நேரடியாக இயக்குனராகவே களமிறங்கி தோல்வியை துவம்சம் செய்து வெற்றி கண்டவர் மணிரத்தினம்.
பகல் நிலவு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் மணிரத்தினம், தொடர்ந்து இதய கோயில், மௌன ராகம், நாயகன்,ரோஜா, பம்பாய், தளபதி ராவணன், கன்னத்தில் முத்தமிட்டால், கடல், பொன்னியின் செல்வன் என பல படங்களை ஹிட் படங்களை கொடுத்திருந்தார். காதலையும் கண்ணியத்தையும் படத்திற்கு படம் வித்தியாசமாக கையாண்டு ரசிகர்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார் மணிரத்தினம்.
மௌனத்தை ஆயுதமென கையாண்டு தனது நேர்த்தியான திரைக்கதையினால் ரசிகர்களை வசீகரிக்கும் மணிரத்தினத்தின் திரை உலக சாதனைகளை கண்ட நடுவன் அரசு 2002 இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
Also read: வாரிசுகளை வளர்க்க முடியாமல் துடிக்கும் 5 அப்பாக்கள்.. மணிரத்தினம் வரை போய் தோற்ற லவ்வர் பாய்
மணிரத்தினம் தற்போது சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது மனைவி நடிகை சுகாசினி நடிகர் கமலஹாசனின் அண்ணன் மகள் ஆவார். இவர்களுக்கு நந்தன் என்று மகன் ஒருவர் உள்ளார். இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா என தமிழனுக்கே உரிய பெருமைகளை பறைசாற்றும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் வரை அவர் இயக்கிய திரைப்படங்களை நாடு முழுவதும் பேச வைத்தார். நான் இயக்கியது அத்தனையும் ஹிட் என கெத்து காட்டும் மணிரத்தினம் படத்திற்கு 22 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
தற்போது நாயகனுக்கு பின் 38 வருடங்கள் கழித்து கமலுடன் தக்லைப்பில் இணைந்துள்ள மணிரத்தினம் ஐந்து வருடங்களுக்கு முன்பே கதை சொல்லி காக்க வைத்ததால் இவருக்கு மொத்தமாக 25 கோடி சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டு 15 கோடி முன்பணம் கொடுக்கபட்டு உள்ளது.
ஆறு முறை தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல விருதுகளை வசப்படுத்தி, அதிக ஆர்ப்பாட்டம் இல்லாது எளிமை விரும்பியான மணிரத்தினத்தின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் 150 கோடிக்கும் மேல். தமிழனின் பெருமை ஆக விளங்கும் பத்மஸ்ரீ மணிரத்தினத்தின் புகழ் நிலைபெற வாழ்த்துக்கள்.
Also read: நாலு கெட்டபில் மிரட்ட வரும் ரங்கராய நாயக்கன்.. மணிரத்தினத்தை நிம்மதி பெருமூச்சு விட வைத்த கமல்