This Week OTT And Theater Release Movies: கடந்த வாரம் தியேட்டரில் வடக்குப்பட்டி ராமசாமி, டெவில் உள்ளிட்ட படங்கள் வெளியானது. அதேபோன்று ஓடிடி தளத்தில் தமிழைப் பொறுத்தவரையில் மதிமாறன் என்ற படம் தான் வெளியானது. அதனாலயே இந்த வாரம் வெளியாக போகும் படங்களை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாயாக கலக்கி இருக்கும் லால் சலாம் ரிலீஸ் ஆக இருக்கிறது. வரும் ஒன்பதாம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நாளில் குட் நைட் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படமும் வெளியாகிறது. அதேபோன்று ஓடிடி தளத்தில் பிப்ரவரி 9 அன்று பல முக்கிய படங்கள் ரிலீஸ் ஆகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
பொங்கலுக்கு விஜய் படம் லால் சலாமுடன் நேரடியாக மோத இருந்தது. ஆனால் அது நடக்காமல் போனாலும் தற்போது ஒரே நாளில் இரு படங்களும் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளி வருகிறது. மேலும் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் 9ம் தேதி வெளியாகிறது.
அதேபோன்று விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப் நடிப்பில் வெளிவந்த மேரி கிறிஸ்துமஸ் படமும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் 9ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனின் அயலான் 9ம் தேதி சன் நெக்ஸ்ட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது.