Simbu – RJ Balaji : சிம்பு மற்றும் ஆர்.ஜே பாலாஜி இருவருமே சினிமாவில் வளர்ச்சி பாதையை நோக்கி தான் தற்போது சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய படங்கள் அதிக வசூல் செய்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இதன் மூலம் பட வாய்ப்புகளும் தொடர்ந்து குவிந்து வருகிறது.
ஆனால் சிம்பு மற்றும் ஆர்.ஜே பாலாஜியால் பிரபல தயாரிப்பாளர் நொந்து போய் இருக்கிறார். அதாவது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் ஐசரி கணேஷ். இவர் இந்நிறுவனத்தின் மூலம் நிறைய இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் சிம்புவை வைத்து ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படம் வசூலை குவித்ததாக சக்சஸ் பாட்டி கொண்டாடி சிம்புக்கு கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி இருந்தார். அதேபோல் தான் இப்போது ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தையும் தயாரித்து வெற்றி விழா கொண்டாடியிருந்தார்.
Also Read : சிம்புவை அணு அணுவாக செதுக்கிய டி.ராஜேந்தர்.. கமலால் கூட முடியாததை செய்து காட்டிய வீராசாமி
ஆனால் பெருமைக்கு குதிரை ஓட்டிய கதையாக தான் இது நடந்திருக்கிறது. வெந்து தணிந்தது காடு, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்கள் வசூல் ரீதியாக எந்த லாபத்தையும் கொடுக்க வில்லையாம். ஆனாலும் நிறுவனத்தின் மீது உள்ள பெயர் கெடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்து வருகின்றனர்.
இதனால் ஏகப்பட்ட நஷ்டத்தில் ஐசரி கணேஷ் நிறைய படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இப்படியே போனால் வேலைக்காகாது என கடன் வாங்கியாவது ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படத்தை தயாரித்து மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.
Also Read : தனுஷுக்கு போட்டியாக சிம்பு கைவசம் இருக்கும் 5 பார்ட் 2 படங்கள்.. மாஸாக ரெடி ஆகும் STR 50